செய்தி வாசிப்பாளராக தன் பயணத்தைத் தொடங்கிய பிரியா பவானி சங்கர் விஜ ய் டிவியின் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை தொடரில் குழந்தைக்கு அம்மாவாக நடித்த மிகவும் பிரபலமானார்.
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. வைபவ் ஜோடியாக மேயாதமான் படத்தில் கதாநாயகியாக நடித்து இருப்பார். அந்தப் படத்தில் கிடைத்த வரவேற்பை அடுத்து கடைக்குட்டி சிங்கத்தில் கார்த்தியின் முறைப் பெண்ணாக நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார்.
மான்ஸ்டர் திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா உடன் நடித்திருப்பார். அப்படம் எலியை மையமாகக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். வடிவேலுடன் சோபாவில் அமர்ந்து இருப்பது போல புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பிரியா சங்கர் பதிவிட்டார். அந்த படத்தில் வடிவேலு எலி பட கெட்டப்பில் இருக்கிறார்.
இந்த புகைப்படம் எலி பார்ட் 2 படமா அல்லது விளம்பரமா பொறுத்திருந்து பார்க்க வேண்டும். வைகைப்புயல் வடிவேலு நடிப்பதற்கான தடை இப்போதுதான் விலகியுள்ளது இப்போது இந்த புகைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகைப்படத்தை ப்ரியா பவானி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அடுத்த படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக நடிக்கிறாரா.? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர் .ஆனால் ரசிகர் ஒருவர் ஷேர் செய்த புகைப்படத்தை தான் பிரியா பவானி சங்கர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.