கடந்த சில மாதங்களாகவே பாடகி சின்மயி தொடர்ந்து பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலி*ல் புகாரை கொடுத்து வருகிறார். ஆனால் யாருமே அதைக் கண்டு கொள்வதாக தெரியவில்லை.
இது சம்பந்தமாக சமீபத்தில் வைரமுத்து தனக்கு அறிவிக்கப்பட்டிருந்த விருதை கூட, இந்தப் பிரச்சனையில் தன்னை நல்லவன் என்று நிரூபிக்காமல் அந்த விருதை வாங்க மறுத்துவிட்டார்.
அப்படி சின்மயி மற்றும் வைரமுத்து இருவருக்குள்ளும் என்னதான் நடந்தது என்ற உண்மையை தெரிந்து கொள்ள பலரும் போராடி வருகின்றனர். ஆனால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்பது போல சின்மயி அதைப் பற்றி ரகசியம் காத்துவருகிறார்.
இந்நிலையில் சின்மயிக்கு இளம்பெண் ஒருவர் வைரமுத்து தன்னிடம் நடந்து கொண்டதை பற்றி ஒரு பதிவை அனுப்பியதாக கூறியுள்ளார். அதில் ஒரு இளம்பெண் ஒரு முறை வைரமுத்துவிடம் வேலைக்காக சென்றிருந்தாராம்.
அன்றே மறுபடியும் வைரமுத்துவை சந்திக்க வேண்டியதாயிற்று. இதனால் மீண்டும் அவரது அலுவலகத்திற்குச் சென்ற போது மோர் சாப்பிடுகிறாயா என்று கேட்டாராம். இங்கு அது ரொம்ப ஸ்பெஷல் என்று சொன்னவுடன் அந்த இளம் பெண்ணும் ஓகே என கூறிவிட்டாராம்.
பிறகு மோர் அருந்திவிட்டு அந்த டம்ளரை வைக்கும் போது, கிளாஸ் தொட்ட உன் உதடுகளை நான் தொட விரும்புகிறேன் என கூறினாராம் வைரமுத்து. அதுமட்டுமில்லாமல் மோர் குடிக்கும் போது உன் உதடுகள் மிக அழகாக இருக்கிறது எனவும் வர்ணித்தாராம்.
ஒரு வயதான ஆண் இளம் பெண்ணைப் பற்றி இப்படி கூச்சமில்லாமல் வர்ணித்து பேசுவது தனக்கு ஒரு மாதிரி சங்கடத்தைக் கொடுத்ததால் அந்த இடத்திலிருந்து விலகிவிட்டேன் எனவும், தொடர்ந்து தன்னை அடைய அவர் பல வழிகளில் முயற்சி செய்ததாகவும் அந்த இளம்பெண் கூறியதாக குறிப்பிட்டிருக்கிறார் சின்மயி.