செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

வைரமுத்துவின் வரிகளால் விதவையான பிரபல பாடகி.. இன்று வரை மனம் நொந்துபோன சம்பவம்

தமிழ் சினிமாவின் பொக்கிஷம் கவிப்பேரரசு வைரமுத்துவின் வரிகள் எப்போதுமே பலருக்கும் பிடித்தமான வரிகளாகும். இதன் காரணமாக ஒரு திரைப்படத்தில் இவர் கமிட்டாகிறார் என்றால், அதில் உள்ள ஐந்து பாடல்களுக்குமே இவர் தான் பாடல் வரிகளை எழுதுவார். அப்படிப்பட்ட வைரமுத்து 80 காலகட்டத்தில் இருந்தே பல திரைப்பட பாடல்களுக்கு பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

அந்த வகையில் வைரமுத்துவின் பாடல் வரியை பாடி, பிரபல பாடகி ஒருவர் விதவையான சம்பவத்தை வைரமுத்து கண்கலங்கி கூறிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் ராதா, கண்ணன் உள்ளிட்டோர் நடிப்பில் 1982ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காதல் ஓவியம். இளையராஜா இசையமைத்த அனைத்து பாடல்களும் செம ஹிட்டானது.

Also Read : இளையராஜா இசை அமைக்காத ஒரே நடிகரின் படம்.. 40 வருட சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த ஆச்சரியம்

இதில் முக்கியமாக நாதம் என் ஜீவனே என்ற பாடல் இன்று வரை பலரது விருப்பமான பாடல் எனலாம். இப்பாடலில் விலகிப் போனால் எனது சலங்கை விதவை ஆகி போகுமே என்ற வரி இடம் பெற்றிருக்கும். இதனிடையே இந்த பாடலை பாடகி எஸ். ஜானகி அவர்கள் பாட வேண்டும் என இளையராஜா அவரிடம் அணுகியிருந்தார். அப்போது சம்மதம் தெரிவித்த எஸ். ஜானகி அவர்கள் அந்த பாடல் வரிகளை முதலில் படித்து பார்த்துள்ளார்.

அதில் ஜானகி அவர்கள் அவரது அசிஸ்டன்ட் இடம் கூறி, வைரமுத்துவிடம் சென்று இந்தப் பாடல் வரியில் விதவை என்ற வரியை மட்டும் நீக்கி தருமாறு கேட்டுள்ளார். ஆனால் இதனைக் கேட்க மறுத்த வைரமுத்து அந்த விதவை என்ற வார்த்தை தான் இந்த பாடலுக்கு முக்கியமான வார்த்தை என்று தெரிவித்தாராம். வேறு வழியில்லாமல் எஸ். ஜானகி அவர்களும் இந்த பாட்டை பாடி முடித்துக் கொடுத்தார். இந்த பாடல் அந்த படத்திலேயே ஹிட்டான பாடலாக அமைந்தது.

Also Read : ஆக்டிங் ஸ்கூலில் ரஜினியுடன் சேர்ந்து படித்த 5 நடிகர்கள்.. இப்பவும் அடிக்கடி ரகசியமாய் சந்திக்கும் சூப்பர் ஸ்டார்

பின்னர் சிறிது காலம் கழித்து எஸ். ஜானகி அவர்கள் வேறு ஒரு பாடல் பாட ஸ்டுடியோவிற்கு வந்துள்ளார். அப்போது அவர் வெள்ளை நிற புடவை அணிந்து, திருநீர் மட்டும் நெற்றியில் வைத்துக் கொண்டு விதவையாக வைரமுத்துவின் முன்னால் வந்து நின்றாராம். இதைப்பார்த்த வைரமுத்து கண்கலங்கி என்ன பேசுவது என்று தெரியாமல் திடுக்கிட்டு போனாராம். இந்த நிகழ்வை தனியார் தொலைக்காட்சி நடத்திய இசை நிகழ்ச்சியின்போது கலந்துகொண்ட வைரமுத்து கண்கலங்கி பேசினார்.

பின்னர் என் பாடல் வரிகளால் தான் அவர் விதவையானார் என்று சொல்லும் அளவிற்கு நான் மூடநம்பிக்கை உடையவன் கிடையாது. இருந்தாலும் ஜானகி அவர்களின் நிலையை பார்த்த பின், எனது அடுத்தடுத்த பாடல் வரிகளில் இப்படிப்பட்ட நெகட்டிவ் வரிகளை எழுதாமல் பார்த்துக் கொண்டேன் என வைரமுத்து கூறினார்.

Also Read : 100 படங்களுக்கு மேல் இசையமைத்து நெஞ்சில் குடியேறிய பிரபலம்.. ஆனாலும் வாய்ப்பு தர மறுக்கும் ரஜினி,கமல்

Trending News