Vairamuthu: இசையா பாடலா என்ற விவாதம் இப்போது பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு வைரமுத்து கலந்து கொண்ட ஒரு விழாவில் இது பற்றி பேசி இருந்தார்.
அதில் அவர் மறைமுகமாக இளையராஜாவை சீண்டியதாக கங்கை அமரன் தன் கோபத்தை வெளிப்படுத்தி இருந்தார். அதை அடுத்து இந்த விவகாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.
மேலும் இளையராஜா சன் நிறுவனத்திற்கு அனுப்பிய நோட்டீசும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து காப்புரிமை பற்றியும் மக்கள் பேசி வருகின்றனர்.
இந்நிலையில் வைரமுத்து இளையராஜா குடும்பத்தை தாக்கும் விதமாக ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் குயில் கூவ தொடங்கி விட்டால் காடு தன் உரையாடலை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
வைரமுத்துவின் பதிவு
புயல் வீச தொடங்கினால் ஜன்னல் வாயை மூடிக்கொள்ள வேண்டும் என உள்ளர்த்தத்துடன் எழுதியுள்ளார். அதன் முடிவில் மக்கள் பேச தொடங்கி விட்டார்கள் என்றால் கவிஞன் தன் குரலை தணித்துக் கொள்ள வேண்டும் என முடித்துள்ளார்.
இதை பார்க்கும் போது அவர் இளையராஜாவை சீண்டியிருப்பது தெரிகிறது. இதன் மூலம் இசை ஞானி மட்டுமல்ல கவிப்பேரரசும் தலைகனத்துடன் இருக்கிறார் என்றும் புரிகிறது.
இதைத்தான் ரசிகர்களும் கமெண்ட் மூலம் கூறி வருகின்றனர். இளையராஜா தன் இசையை மட்டும் தான் நம்பி இருக்கிறார். உங்கள் வன்மத்தை இங்கு காட்டாதீர்கள்.
உங்களுக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை என ரோஸ்ட் செய்து வருகின்றனர். மேலும் உங்கள் வரிகள் இல்லாத இசையை மக்கள் எப்போதோ கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள் எனவும் கூறி வருகின்றனர்.