Jason Sanjay: நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக போகிறார் என்பதிலிருந்து அவர் மீது மொத்த மீடியாக்கள் கவனமும் சென்று விட்டது.
அப்பா இந்த துறையில் பெரிய நடிகர். அதனால் தான் ஈஸியாக முதல் படமே லைக்கா நிறுவனம் தயாரிக்க முன்வந்திருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டது.
உண்மையை சொல்லப் போனால் அப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி எப்படிப்பட்ட ஹீரோ ஹீரோயினை கூட தன்னுடைய படத்தில் நடிக்க வைத்திருக்கலாம்.
அப்பாவை மிஞ்சிட்டாரே ஜேசன் சஞ்சய்
ஆனால் ஜேசன் சஞ்சய் தன்னுடைய கதையின் ஹீரோவை தேர்ந்தெடுக்கவே பல மாதங்கள் எடுத்துக் கொண்டார்.
இதிலிருந்து ஒரு இயக்குனராக தன்னுடைய தனித்துவத்தை அவர் காட்ட போராடுவது நன்றாக தெரிகிறது. இந்த நிலையில் வலைப்பேச்சு அந்தணன் ஜேசன் சஞ்சய் பற்றி ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.
அதாவது ஆபீசுக்கு காலையில் கரெக்டா மற்ற ஊழியர்கள் எத்தனை மணிக்கு உள்ளே வருகிறார்களோ அந்த டைமுக்கு அவரும் வந்து விடுவாராம்.
அதேபோன்று எல்லோருடனும் தான் ஆபீசை விட்டு வெளியேறுகிறாராம். அதேபோன்று ஆபீசில் வழங்கப்படும் உணவை தான் அவரும் சாப்பிடுகிறாராம்.
தனக்கென்று தனியாக எந்த ஒரு சலுகையும் அவர் எதிர்பார்ப்பது இல்லையாம். உண்மையை சொல்லப்போனால் எளிமையில் அப்பா விஜய்யை மிஞ்சி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.