கோலிவுட்டில் எந்த பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி, வெற்றி தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். அதேபோல் ரசிகர் மன்றம் இல்லாமல் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தில் குடியிருக்கும் பெருமையும் இவரைச் சேரும்.
தற்போதெல்லாம் தல அஜித் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இவருடைய ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீஸில் நிறைத்து தள்ளுகிறது.
அதுமட்டுமில்லாமல் தல அஜித் பற்றி ஏதாவது ஒரு விஷயம் இணையத்தில் லீக்கானால் அதை வைரல் ஆக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் சில தல வெறியர்கள்.
சமீபத்தில் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி விட்டதாக தல ரசிகர்கள் அடித்த கூத்தில் தல அஜித்தே ஷாக் ஆகி ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதுமட்டுமில்லாமல் தொடர்ந்து தல ரசிகர்கள் யாரிடமும் வலிமை அப்டேட் கொடுங்கள் என கோரிக்கை வைக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
உரிய நேரத்தில் வலிமை படத்தைப் பற்றிய செய்திகள் உங்களை தேடி வரும் என அஜித் குறிப்பிட்டுள்ளதை தொடர்ந்து சமீபத்தில் தல அஜித்தின் புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.
மொட்டை தலையுடன் கருப்பு கலர் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு வெளியில் வந்த தல அஜித் ரசிகர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.