அஜித்தின் வலிமை திரைப்படம் ரசிகர்களுக்கு அடுத்தடுத்த பல மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கிறது வலிமை திரைப்படம் போஸ்டர்களை ரசிகர்கள் வெகுவாக கொண்டாடி வருகிறார்கள். தற்போது தமிழக அரசின் புதிய அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர் .
தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் புதிய திட்டங்களை அமுல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் தென்னரசு அவர்கள் அரசு சார்பில் வலிமை சிமெண்ட் என்ற புதிய பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தினார். மேலும் இந்த வலிமை சிமெண்ட் இந்த ஆண்டு முதலே வெளிச்சந்தையில் வணிக படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார் .
இது ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பல திட்டங்களைப் பற்றியும் தொழில் துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்துள்ளார் மழைக்கால நிதியுதவியாக உப்பள தொழிலாளர்கள் ஆண்டுக்கு ரூபாய் 5000 வழங்கப்படும் அதைத்தொடர்ந்து திருக்கோவில் வகுப்புகளில் நடைமுறையிலுள்ள தேவாரம், திருவாசகம் ,நாலாயிர திவ்ய பிரபந்தம் இவற்றுள் சேர்த்து திருக்குறளும் நடத்தப்படும் என்று அவர் அறிவித்திருக்கிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 500 ஏக்கரில் 5.90கோடி மதிப்பில் உப்பு உற்பத்தி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். இவை அனைத்தையும் விட வலிமை சிமெண்ட் திட்டம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.