வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இணையத்தில் லீக்கான வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.. கொண்டாடும் தல வெறியர்கள்!

கோலிவுட்டில் எந்த பின்புலமும் இல்லாமல் அறிமுகமாகி, வெற்றி தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் தல அஜித். அதேபோல் ரசிகர் மன்றம் இல்லாமல் கோடிக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சத்தில் குடியிருக்கும் பெருமையும் இவரைச் சேரும்.

தற்போதெல்லாம் தல அஜித் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இவருடைய ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீஸில் நிறைத்து தள்ளுகிறது.

அதுமட்டுமில்லாமல் தல அஜித் பற்றி ஏதாவது ஒரு விஷயம் இணையத்தில் லீக்கானால் அதை  வைரல் ஆக்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் சில தல வெறியர்கள்.

இந்த நிலையில் தற்போது இணையத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் லீக்காகி வைரலாகி வருவதாகவும், அதை ரசிகர்கள் கொண்டாடி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது போனி கபூரின் தயாரிப்பில், ஹச் வினோத்தின் இயக்கத்தில், அஜித் நடித்துக்கொண்டிருக்கும் படம் தான் ‘வலிமை’. இந்தப் படம் ஆரம்பிக்கப்பட்ட போது பூஜை போட்டதைத்தவிர மற்ற எந்த அறிவிப்பையும் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

இதனால் வலிமை படத்தின் அப்டேட்டை எதிர்நோக்கி தல வெறியர்கள் வெறி கொண்டு பல நாட்களாக காத்திருக்கின்றனர். இவ்வாறிருக்க, தற்போது இணையத்தில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் லீக்காகி உள்ளது. இந்தப் புகைப்படத்தில் தல கையில் துப்பாக்கி பிடித்திருப்பது போல் தெரிகிறது.

Valimai-FirstLook
Valimai-FirstLook

இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்து இருப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் தல ரசிகர்கள் போஸ்டரை கொண்டிருப்பதோடு, பூஜித்து கொண்டிருக்கின்றனராம்.

Trending News