தல அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை திரைப்படம் கடைசி கட்ட படப்பிடிப்புகளில் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறது. இந்தியாவிலேயே பெரிய தயாரிப்பாளராக இருந்தும் வலிமை படத்திற்கு உதவ முடியாமல் சங்கடப்பட்டு வருகிறாராம் போனி கபூர்.
நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக வினோத் மற்றும் அஜித் கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது. இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணையவும் அதிக வாய்ப்பு இருக்கிறது.
ஏற்கனவே ஒரு வருடங்களுக்கு மேல் படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது கடைசி கட்ட படப்பிடிப்புக்காக வெறும் மூன்று நாட்கள் வெளிநாடு போக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால் தற்போது கொரானா பிரச்சினை அதிகரித்து வருவதால் மீண்டும் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவதற்கான வருவதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவாக உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
ஒரு சில நாடுகளில் படப்பிடிப்புகள் நடத்த அனுமதி கொடுக்கப்பட்டாலும் இன்னும் பெரும்பாலான நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் ஸ்பெயின் நாட்டுக்கு செல்வதற்கான அனுமதி கிடைக்காமல் தடுமாறி வருகிறதாம் படக்குழு.
ஏற்கனவே மே 1ம் தேதி ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முடிவு செய்துள்ளார்களாம். ஆனால் போகிற போக்கை பார்த்தால் வலிமை தீபாவளி தான் என்கிறது கோலிவுட் வட்டாரம்.
