சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

வலிமை அப்டேட்.. இதுக்கு மேல பொறுக்க முடியாது தல என பொங்கிய வினோத்

தல அஜித் நடிப்பில் வலிமை படம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. ஆனால் இன்னமும் முடிந்தபாடில்லை. இன்னும் பத்து நாட்கள் படப்பிடிப்பு பாக்கியுள்ளது.

வலிமை படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள் வெளிநாட்டில் தான் படமாக்கப்பட வேண்டும் என வினோத் விடாபிடியாக இருப்பதால் தற்போது வெளிநாட்டுப் பயணத்திற்கான அனுமதிக்காக படக்குழுவினர் தேவுடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஜூலை முதல் வாரம் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இரண்டையுமே சேர்த்து வெளியிடப்போவதாக பேச்சு கிளம்பியுள்ளது. இதில் மிக தீவிரமாக இருப்பது வினோத் தானாம். அவரால்தான் இந்த தாமதம் என இப்படி வேறு கிளப்பிவிட்டார்கள்.

valimai-cinemapettai
valimai-cinemapettai

அதுமட்டுமில்லை ஆகஸ்ட் மாதம் டீசர், செப்டம்பர் மாதம் டிரைலர், அக்டோபர் மாதம் இறுதியில் படம் ரிலீஸ் இதுதான் அவர்களுடைய ஒரே திட்டமாம்.

பீஸ்ட் அப்டேட் ரகளை கட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் வலிமை அப்டேட் அஜித் ரசிகர்களும் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்து விடுகிறார்கள் அடுத்த மூன்று மாதத்திற்கு அஜித் ரசிகர்கள் ட்ரெண்டிங் தான்.

Trending News