இதுவரை தான் எடுத்த படங்களிலேயே தனக்கு மிகவும் மன அழுத்தத்தைக் கொடுத்த திரைப்படம் என்றால் இதுதான் என போனிகபூர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளது பலருக்கும் அச்சத்தை கொடுத்துள்ளது.
இந்தியில் பிரபல தயாரிப்பாளரான போனிகபூர் தமிழிலும் தல அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை தயாரித்துள்ளார். அதனைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்கையும் தயாரித்து வருகிறார்.
அதேசமயம் ஹிந்தியிலும் தொடர்ந்து பல படங்களை தயாரித்து வருகிறார். பெரும்பாலும் போனிகபூர் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கப் ஆசைப்படுவதால் அடிக்கடி சிக்கலில் மாட்டிக் கொள்வது வழக்கம் தான்.
ஆனால் இந்த முறை பட ரிலீஸுக்கு முன்னரே கோடிக்கணக்கில் நஷ்டமடைந்து மன வேதனைக்குள்ளாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். போனி கபூர் தற்சமயம் தயாரிக்கும் பெரிய படங்களில் ஒன்று மைதான்.
அஜய் தேவ்கன் நடித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக கிட்டத்தட்ட 2 கோடி செலவில் செட் போடப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் வந்தால் டவ் தே புயல் காரணமாக அவை அனைத்தும் வீணாகிவிட்டது.
இதனால் மீண்டும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் போனி கபூர். கடந்த சில வருடங்களில் அவரது தயாரிப்பில் படங்கள் இருந்தாலும் எந்தப் படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.