அஜித் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு வலிமை ரிலீஸ் எப்போ என்பதுதான். அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் 2019 இல் வெளியானது. அதன் பிறகு இரண்டு வருடங்கள் முடிந்தும் அஜித் படம் வெளியாகாமல் இருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியது.
நேர்கொண்ட பார்வை வெற்றியை தொடர்ந்து அஜித், வினோத் போனிகபூர் கூட்டணியில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படம் இந்த ஆண்டு ஜனவரி 13 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீதத்தை இருக்கைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதனால் அஜித்தின் வலிமை, ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் போன்ற படங்கள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் விஜய்யின் பீஸ்ட் படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியிருந்தது. அப்போது தான் அஜித்தின் வலிமை படமும் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள். ஆனால் வலிமை படம் மார்ச் மாதத்திலேயே வெளியாக உள்ளது.
வலிமை படம் மார்ச் 18 அல்லது மார்ச் 25ஆம் தேதிகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் கூறியுள்ளார். பலமுறை தள்ளிப்போன வலிமை படம் கண்டிப்பாக மார்ச்சில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அஜித் படத்துக்காக இரண்டு வருடம் காத்திருந்த அவரது ரசிகர்களுக்கு விருந்தாக வலிமை படம் அமைய உள்ளது.
