கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்புகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் படக்குழுவினர் பத்துநாள் படப்பிடிப்புக்காக ஸ்பெயின் நாட்டுக்கு செல்லவுள்ளனர்.
அங்கு கிளைமாக்ஸ் காட்சிகள் மட்டும் படமாக்க வேண்டிய உள்ளதாம். அது முடிந்ததும் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் அனைத்துமே விரைந்து முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சரி, அது ஒரு பக்கம் இருக்கட்டும். தல அஜித் சமீபகாலமாக வலிமை படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து கவனித்து வருவதாக அஜித் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணமும் இருக்கிறதாம்.
ஒரு வருடத்திற்கும் மேலாக தன்னை பார்க்க காத்துக் கொண்டிருக்கும் ரசிகர்களை ஏமாற்றி விடக்கூடாது என்பதற்காக வலிமை படத்தை கூர்மையாகத் தீட்டிக் கொண்டிருக்கிறாராம் அஜித். மேலும் வலிமை படம் கண்டிப்பாக ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என வினோத்துக்கு செல்லமாக உத்தரவிட்டுள்ளாராம்.
மேலும் படக்குழுவினரும் தயாரிப்பாளரும் வலிமை படத்தின் ரிலீஸ் தேதி பற்றி அஜித்திடம் சமீபத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். முதலில் அஜித் பிறந்தநாளுக்கு வலிமை படம் வரும் என செய்திகள் மற்றும் வதந்திகளும் அளவுக்கு அதிகமாக பரவி வந்தன.
இந்நிலையில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியை அஜித் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. வருகின்ற 2021 ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி வலிமை படம் வெளியாக உள்ளதாம். வலிமை படமும் வியாழக்கிழமை செண்டிமெண்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.