வலிமை படத்தின் கதையும் அஜித்தின் முதுகில் குத்துவது தானா? IMDB பக்கத்தில் கசிந்த வலிமை கதை

தல அஜித் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு வினோத் இரண்டாவது முறையாக தல அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார்.

மேலும் அஜித்துடன் இணைந்து இரண்டாவது படத்தை தயாரித்து வருகிறார் போனி கபூர். வலிமை படம் கண்டிப்பாக பான் இந்தியா படமாக வர அதிக வாய்ப்பு இருப்பதாக வலிமை வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இன்னும் 10 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு மிச்சம் உள்ள நிலையில் அதை வெளிநாட்டில் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தற்போது அனுமதிக்காக படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் வலிமை படத்தின் டப்பிங், எடுத்த வரையில் எடிட்டிங் என அனைத்தையும் முடித்துவிட்டதாம் படக்குழு. இந்நிலையில் தான் IMDB பக்கத்தில் வலிமை படத்தின் கதை என்ன என்பது போன்ற ஒரு வரி இடம் பெற்று தல ரசிகர்களை அதிர்ச்சியாகி உள்ளது.

அதாவது இளம் வயதில் அஜித் பைக் ரேஸ் வீரராக இருப்பதாகவும், அப்போது சிலரின் சதியால் அதை விட்டு விலகி பின்னர் போலீஸாக மாறி அவர்களை பழிவாங்குவது போன்ற கதையைத்தான் மசாலா தூவி உருவாக்கியுள்ளாராம் வினோத்.

விவேகம் படத்தை போலவே இந்த படமும் தல அஜித்தை நம்பவைத்து நண்பர்கள் முதுகில் குத்துவது போன்ற கதைதானா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் வினோத் இயக்குனர் என்பதால் புது மாதிரியான திரைக்கதை அமைந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

valimai-story-leaked
valimai-story-leaked