வலிமை தமிழ்நாடு ரைட்ஸ் இத்தனை கோடிக்கு விலைபோனதா? மாஸ்டரை விட ஒரு கோடி கம்மிதான்!

வலிமை படம் இறுதிக்கட்டத்தை அடைந்த நிலையில் தற்போது வலிமை படத்தின் வியாபாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன. அந்த வகையில் தமிழ்நாட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார்.

இதுவரை வந்த அஜித் படங்களிலேயே வலிமை படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் அஜீத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்லும் என்ற அளவுக்கு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுமட்டுமல்லாமல் அஜித்தின் கேரியரில் அதிக வசூல் செய்த படமாக மாறியது. ஆனால் அந்த வசூலை எல்லாம் வலிமை அசால்டாக முறியடித்து விடும் என்கிறார்கள் படக்குழுவினர்.

வழக்கம்போல் அஜித் வலிமை படத்திலும் இரண்டுவிதமான கெட்டப்புகளில் வருகிறாராம். ஒன்று இளமை, இன்னொன்று சால்ட் அன்ட் பெப்பர். மேலும் அஜித்தின் ஆஸ்தான இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதால் வலிமை படத்தின் BGMக்கு தல ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இறுதி கட்டத்தை அடைந்த வலிமை படத்தின் வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் தமிழ்நாட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் கிட்டத்தட்ட 67 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது. இது விஸ்வாசம் படத்தை விட அதிகம்.

valimai-rights-to-gopuramcinemas
valimai-rights-to-gopuramcinemas

ஆனால் விஜய்யின் மாஸ்டர் படத்தை விட ஒரு கோடி கம்மியாகத்தான் விலைபோயுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. முதலில் மாஸ்டர் படம் 78 கோடி ரூபாய் வியாபாரம் நடைபெற்ற நிலையில் பின்னர் கொரானாவை காரணம் காட்டி 68 கோடியாக குறைத்து விட்டனர் என்பதும் கூடுதல் தகவல்.

பொழுதுபோக்கு

புகைப்படங்கள்