தல அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் பாதிக்கிணறு தாண்டிய நிலையில் மீதிக் கிணறு தாண்ட முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு வாரம் படப்பிடிப்பு பாக்கி உள்ள நிலையில் ஸ்பெயின் நாட்டில் தான் படமாக்க வேண்டும் என வினோத் கூறிவிட்டதால் படக்குழுவினர் அனுமதிக்காக பொறுமை காத்து வருகின்றனர்.
இதற்கிடையில் வலிமை படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டார்களாம். காட்சிகள் எடுத்தவரை எடிட்டிங் பணிகள் மற்றும் அஜித்தின் டப்பிங் பணிகள் ஆகியவற்றை முடித்து கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் வெயிட் செய்து கொண்டிருக்கிறார்களாம்.
இந்நிலையில் நாளுக்கு நாள் வலிமை படத்தின் சீக்ரெட்டுகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் வலிமை படத்தில் மொத்தம் எத்தனை சண்டை காட்சிகள் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
வலிமை படத்தின் முதல் பாதியில் ஐந்து சண்டைகாட்சிகளும் இரண்டாவது பாதியில் 4 சண்டை காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் அதிரடிகளுடன் உருவாகி உள்ளது தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் சென்டிமென்ட் காட்சிகளும் பிரதானமாக உள்ளது என படக்குழுவினரை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். சில சண்டை காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். போகிற போக்கை பார்த்தால் வலிமை படம் அடுத்த ஜாக்கிசான் பட ரேஞ்சுக்கு பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மே 1ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துவிட்டு தற்போது தள்ளி வைத்து விட்டனர். இதற்கிடையில் குறித்த தேதியில் படம் வருமா என்பது சந்தேகம் தான் என்கிறது சினிமா வட்டாரம்.
