இயக்குனர்கள் என்று எடுத்துக்கொண்டாலே வருடத்திற்கு ஒரு படத்தையாவது இயங்குவார்கள் அல்லது குறைந்தது 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது படங்களை இயக்கி வெளியிடுவார்கள். படம் தோல்வியடைந்தாலும்,வெற்றியடைந்தாலும் அடுத்தடுத்த படங்களை இயக்க ஆயத்தமாகிவிடுவார்கள். ஆனால் இந்திய சினிமாவில் இருக்கும் இயக்குநர்களிலே அதிக வருடங்கள் திரைத்துறையில் இருந்தும் குறைந்த படங்களை மட்டுமே கொடுத்த இயக்குனர் தான் வம்சி பைடிப்பல்லி
விஜயின் வாரிசு படத்தை இயக்கியுள்ள வம்சி பைடிப்பல்லி திரையுலகிற்கு வந்து கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகிறது. 2007 ஆம் ஆண்டு முன்னா என்ற தெலுங்கு படத்தை இயக்கிய வம்சி தொடர்ந்து மஹரிஷி, ஊப்ரி உள்ளிட்ட 5 தெலுங்கு படங்களை இயக்கியுள்ளார். இதில் ஊப்ரி என்ற படம் தான் நடிகர் கார்த்தி, நாகர்ஜுனா நடிப்பில் தமிழில் வெளியான தோழா திரைப்படமாகும்.
இப்படத்திற்கு சிறந்த இயக்குனர் என்ற தேசிய விருதையும் வம்சி பைடிப்பல்லி பெற்றார். இதனிடையே இயக்குனர் வம்சி 15 வருடங்களில் வெறும் 5 படங்களை மட்டும் இயக்கியதற்கான காரணம் குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. இவர் இயக்கிய 5 படங்களுமே சூப்பர்ஹிட்டான நிலையில் இந்த கேள்வி அவர் முன் வைக்கப்பட்டது. அதற்கு வம்சியின் பதில் தான் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
தான் சினிமாவில் பல வருடங்கள், பல திரைப்படங்களில் அசிஸ்டன்ட் இயக்குனராக வேலை செய்துள்ளேன். ஒரு படம் ஹிட்டாக வேண்டும் என்றால் கதை முக்கியமானது என்பதை தான் நம்புகிறேன் ஆகையால் நான் மட்டுமே கதையை எழுதமாட்டேன் ,என்னிடம் கதை இலாக்க ஒருவர் உள்ளார். அவர் நான் சொல்லும் படத்தை பார்த்து வந்து தன்னிடம் கதை கூறுவார்.
Also Read: விஜய்யை நாலாபக்கமும் சுத்தி அடிக்கும் பிரச்சனை.. வாரிசு ஆடியோ லான்ச் நடக்குமா?
அவர் எப்படி கதை சொல்கிறாரோ அதன் படி என் படத்தின் கதையை எழுத ஆரம்பிப்பேன் என ஆச்சரியமூட்டும் பதிலை கூறினார். நம் தமிழ் சினிமாவில் 70,80 காலக்கட்டத்தில் கதை இலாக்காக்கள் என்ற குழுவே இருந்தது. குறிப்பாக பிரபல தயாரிப்பு நிறுவனமான தேவர் பிலிம்ஸில் இருந்த கதை இலாக்காக்கள் படத்தை பார்த்து வந்து ஒவ்வொருவரும், ஒவ்வொரு கதையை கூறுவார்கள்.
இந்த கதை இலாக்காக்கள் குழு காலப்போக்கில் மறைந்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இயக்குனர் வம்சி இந்த முறையை 15 வருடங்களாக பயன்படுத்தி வருவது தான் ஆச்சரியமாக உள்ளது. இதனிடையே வம்சி இயக்கியுள்ள வாரிசு படத்தில் கட்டாயம் கதை வலிமையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர்.