வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

விஜய்யின் சந்தோஷத்துக்கு ஆப்பு வைத்த வம்சி.. மருத்துவமனையிலிருந்து வந்தவுடனேயே செய்த வேலை

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது. ஆரம்பத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது. அண்மையில் வம்சிக்கு மனஅழுத்தம் மற்றும் தூக்கமின்மை காரணமாக உடல்நிலை மோசமானது.

இதனால் வம்சி சிறிது நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறியிருந்தார்கள். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வம்சி டிஸ்டார்ஜ் ஆனவுடன் ஞாயிற்றுக்கிழமையிலிருந்து வாரிசு படத்தின் சூட்டிங் தொடங்கி உள்ளார். விஜய்யும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார்.

Also Read : பிரபல படத்தை அட்டை காப்பி அடிக்கும் வம்சி.. வாரிசுக்கு வந்த சோதனை

மேலும் விஜய் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் வாரிசு படத்தின் சில காட்சிகளை பார்த்து வருகிறாராம். இந்த படம் விஜய்க்கு மிகவும் பிடித்து விட்டதாம். இதனால் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் இதை சொல்லி சந்தோஷப்பட்டு வருகிறாராம்.

ஆனால் தற்போது விஜய்க்கு ஒரு செக் வைத்துள்ளார் வம்சி. அதாவது ஆரம்பத்தில் வாரிசு படத்திற்காக விஜய் இடம் 120 நாள் கால்சூட் கேட்கப்பட்டது. ஆனால் விஜய் 103 நாட்கள் மட்டுமே கால்சூட் கொடுத்தார். இந்நிலையில் விஜய் கொடுத்த 103 நாட்களும் முடிந்து விட்டதாம்.

Also Read : வாரிசு ரிலீஸ் தேதியை லாக் செய்த தளபதி.. எந்த அலப்பறையும் இல்லாமல் விலகிய அஜித்தின் AK61

ஆனால் படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டும் என்பதற்காக மேலும் 40 நாட்கள் கால்சூட் விஜயிடம் வம்சி கேட்டுள்ளார். வாரிசு படம் நன்றாக வந்திருக்கிறது என சந்தோஷத்தில் இருந்த விஜய்க்கு இந்த விஷயம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஏனென்றால் வாரிசு படத்தின் சூட்டிங் முடித்த கையோடு லோகேஷ் கனகராஜின் தளபதி 67 படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகி இருந்தார். இந்த சூழலில் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தாமதம் ஆகி வருவதால் தளபதி 67 படம் தள்ளி போக அதிக வாய்ப்பு உள்ளது.

Also Read : தலைகணத்தில் இருக்கும் விஜய்.. எங்களுக்கு தளபதியே தேவையில்லை என்று முடிவெடுத்த ரசிகர்கள்.!

Trending News