ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

வானம் படத்தில் முதலில் சிம்பு இல்லையாம்.. இந்த பிரபல நடிகர்தான் நடிக்க வேண்டியது.. நல்லவேளை நடிக்கல!

சிம்பு, பரத் நடிப்பில் பிரபல இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் 2011ல் வெளியாகி வெற்றி கண்ட படம் வானம். இத்திரைப்படத்தில் வெவ்வேறு கோணங்களில் பயணிக்கும் மாறுபட்ட ஐந்து நபர்களை ஒரே நேர் கோட்டில் இணைத்து மனிதம் மனிதநேயம் என்கிற அடிப்படை விடயங்களை வெளிக்கொணர்ந்த அட்டகாசமான படங்களில் ஒன்று.

எப்போதும் மாறுபட்ட கோணங்களில் எடுக்கப்பட்ட படங்கள் சரியான புரிதல் தரப்படாததால் நெகட்டிவ் ரிசல்ட் வரும் வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் இப்படம் சரியான கண்ணோட்டத்தில் அனைத்து தர ரசிகர்களுக்கும் புரியும்படி எடுக்கப்பட்டிருந்தது இதன் இன்னொரு சிறப்பம்சம்.

இப்படத்தின் ரீமேக் இப்போது தயாராகி வரும் நிலையில் தமிழில் கோ, யான் போன்ற வெற்றிப்படங்களின் நாயகன் ஜீவா சிம்புவின் கதாப்பாத்திரத்திலும் பரத் வேடத்தில் தெலுங்கு முன்னணி நடிகரும் நடிகர் மோகன் பாபுவின் மகனுமான மஞ்சு மோகனும் ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழுவின் தகவல்.

வானம் முதல் பாகத்தில் யுவன் சங்கர் ராஜாவின் இசை வெகுவாய் கைகொடுத்தது இருந்தது மேலும் காமெடி ரோலில் அப்படத்தின் தயாரிப்பாளர் விடிவி கனேஷ் மிரட்டியிருப்பார்.

அந்த இரண்டு இடங்களை நிரப்பும் நபர்கள் பற்றிய செய்தியை விரைவில் படக்குழுவிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

jeeva-cinemapettai
jeeva-cinemapettai

Trending News