வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சூர்யாவை தொறத்திட்டு பாலா எடுக்கப்போகும் வணங்கான்.. அடுத்த ஹீரோ யார் தெரியுமா?

தற்போது இணையத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயம் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியது தான். இந்த அறிவிப்பை இயக்குனர் பாலாவே அறிவித்துள்ளார். அதாவது வணங்கான் படப்பிடிப்பில் சூர்யா மற்றும் பாலா இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக அவ்வப்போது செய்தி வெளியானது.

சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் விரைவில் வணங்கான் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக அறிவித்தார். ஆனால் பாலா மற்றும் சூர்யா இடையே சமூக பேச்சுவார்த்தை நடைபெறாத காரணத்தினால் சூர்யா மற்றும் அவருடைய 2D தயாரிப்பு நிறுவனம் சேர்ந்து வணங்கான் படத்தில் இருந்து விலகி உள்ளது.

Also Read : எவ்வளவுதான் நான் பொறுத்து போறது, உன் சங்காத்தமே வேண்டாம்.. பாலா வெளியிட்ட அறிக்கையால் அதிர்ச்சியில் சூர்யா

ஆனால் பாலாவின் அறிக்கையில் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு சீக்கிரம் தொடங்கும் என்று கூறியுள்ளார். இந்நிலையில் சூர்யா இடத்தில் எந்த ஹீரோ நடிக்கப் போகிறார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது. இதற்கான வேலையில் தான் தற்போது பாலா இறங்கியுள்ளார்.

இப்போது வணங்கான் படத்தில் ஆர்யா அல்லது விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இந்த இரண்டு ஹீரோக்களுமே ஏற்கனவே பாலாவின் படத்தில் நடித்துள்ளனர். அவன் இவன் படத்தில் ஆர்யா மற்றும் விஷால் இருவரும் இணைந்துள்ளனர்.

Also Read : ஜெய் பீம் 2-க்கு தயாராகும் சூர்யா.. இயக்குனர் கொடுத்த சர்ப்ரைஸ்

மேலும் ஆர்யாவின் நான் கடவுள் படத்தையும் பாலா தான் இயக்கியிருந்தார். இந்நிலையில் சூர்யா அளவுக்கு இவர்களால் திறமையாக நடிக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். இப்போது பாலா துணிச்சலாக வணங்கான் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறியதற்கு காரணம் ஆர்யா தான் எனக் கூறப்படுகிறது.

ஆகையால் சூர்யா இடத்தில் ஆர்யா தான் வணங்கான் படத்தில் நடிக்கவிருக்கிறார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக வாய்ப்புள்ளது. மேலும் 2D என்டர்டைன்மென்ட் விலகியுள்ளதால் படத்தை யார் தயாரிக்கிறார்கள் என்ற தகவலும் வெளியாகும்.

Also Read : ரத்தன் டாடா சூர்யா இல்லையா.. அதிர்ச்சி தகவலை கூறிய கே ஜி எஃப் பட நிறுவனம்

Trending News