திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

நயன்தாராவுக்கு போட்டியாக வளர்ந்து வரும் வாணி போஜன்.. பாராட்டித் தள்ளிய பிரபலம்!

தெய்வமகள் என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். அதற்கு பின்னர் ஓ மை கடவுளே, லாக் அப் போன்ற படங்களின் மூலம் நடிகைக்கான அங்கீகாரத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார்.

சமீபத்தில் வெளிவந்த மலேசியா டு அம்னீஷியா திரைப்படம் ரசிகர் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. ராஜ் மோகன் இயக்கத்தில் வாணிபோஜன், வைபவ், கருணாகரன், எம்எஸ் பாஸ்கர் போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.

பிரேம்ஜி இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 28ஆம் தேதி Zee5 OTT தளத்தில் வெளிவந்த காமெடி கலந்த இந்த படம் கொரோனா காலகட்டத்தில் ரசிகர்களுக்கு பெரும் பொழுதுபோக்காக இருந்தது.

வாணி போஜன் நடிப்பை பார்த்து மிரண்டு போன இயக்குனர் ராதா மோகன் பாராட்டித் தள்ளியுள்ளார். கணவனுடன் ஒரு காட்சியில் மிக யதார்த்தமாக அந்த கதாபாத்திரமாக வாழ்ந்து இருப்பதாகவும் வாணி போஜன் தமிழ்சினிமாவில் மிகப் பெரிய நடிகையாக வருவார் என்று பாராட்டியுள்ளார்.

அபியும் நானும்,மொழி போன்ற சென்டிமென்ட் படங்களை தயாரித்தவர் ராதா மோகன் குறிப்பிடத்தக்கது. சின்னத்திரையில் நயன்தாரா என்று அழைக்கப்பட்ட வாணிபோஜன் தற்போது வெள்ளித்திரையிலும் நயன்தாராவுக்கு போட்டியாக வந்துவிடுவாரா என்ற பீதியை கிழப்பி உள்ளார்.

vanibhojan-vaibav-cinemapettai
vanibhojan-vaibav-cinemapettai

ஆனால் கோலிவுட்டில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா ஹாலிவுட்டில் நடிகைக்கு நிகராக தனது தோற்றத்தை மாற்றி கலக்கி வருகிறார், அவரை தொடுவது என்பது அவ்வளவு எளிதல்ல.

Trending News