செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

முதல் முறையாக பிரபல நடிகருக்கு ஜோடியாகும் வாணி போஜன்.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் சஸ்பென்ஸ் திரில்லர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் வாணி போஜன். இளம் நடிகர்களின் பார்வை அனைத்தும் வாணி போஜன் மீது தான் இருந்து வருகிறது.

அதுமட்டுமில்லாமல் வாணி போஜன் நடிக்கும் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் அந்த ராசியை பயன்படுத்தி அனைத்து நடிகர்களும் வாணி போஜன் உடன் ஜோடி போட விருப்பப்பட்டு வருகின்றனர்.

முதலில் இளம் நடிகர்களுக்கு ஜோடியாகி வந்த வாணிபோஜன் தற்போது சினிமாவில் இரண்டாம் கட்ட நடிகர்களுடன் ஜோடி போட ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் சசிகுமார், விக்ரம் பிரபு போன்றோரின் படங்களில் நடித்து வருகிறார்.

vani-bhojan-cinemapettai-01
vani-bhojan-cinemapettai-01

அடுத்ததாக நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமாவில் மீண்டும் உயிர்த்தெழுந்துள்ள நடிகர் பரத்துடன் ஒரு படத்தில் இணைய உள்ளாராம். சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகும் இந்தப் படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார்.

மேலும் படக்குழு வாணி போஜன் தான் வேண்டுமென தயாரிப்பு தரப்பை நச்சரித்ததாக தெரிகிறது. பிரபலமான முகம் இருந்தால் படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு இருக்கும் என்பதால் தயாரிப்பாளரும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டாராம்.

bharath-cinemapettai
bharath-cinemapettai

சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்து கலக்கி கொண்டிருக்கும் ப்ரியா பவானி சங்கருக்கு அடுத்து கைவசம் நிறைய படங்கள் வைத்திருக்கும் நடிகை என்றால் அது வாணி போஜன் தான். இன்னும் சில வருடங்களில் வாணி போஜன் முன்னணி நடிகையாக வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Trending News