சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் வாணி போஜன். சின்னத்திரை நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டு தற்போது சினிமாவில் தடம் பதித்து வருகிறார்.
அதுமட்டுமில்லாமல் வாணி போஜன் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடைசியாக வாணி போஜன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படம் செம்ம ஹிட்டடித்தது.
அதேபோல் நேரடியாக வாணிபோஜன் நடிப்பில் ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கேயும் வெற்றியைப் பெற்ற திரைப்படம்தான் லாக்கப். முதல் முறையாக வைபவ் ஜோடியாக கொஞ்சம் நெருக்கமான காட்சிகளில் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
தற்போது அதனை தொடர்ந்து மீண்டும் வைபவ் உடன் மீண்டும் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் வாணி போஜன். இந்தப் படத்தை தமிழ் சினிமாவுக்கு அபியும் நானும், பயணம் போன்ற தரமான படங்களை கொடுத்த ராதா மோகன் இயக்கி வருகிறார்.
இந்தப் படம் நேரடியாக ஜீ5 என்ற ஓடிடி தளத்திற்காக உருவாகி வருகிறதாம். முதல் படத்திலேயே வைபவ் மற்றும் வாணிபோஜன் ஆகிய இருவருக்கும் கெமிஸ்ட்ரி ஹிட்டானதால் தொடர்ந்து அவர்கள் ஜோடியை பயன்படுத்த கோலிவுட் வட்டாரம் திட்டமிட்டுள்ளதாம்.
வாணி போஜனும் வைபவ் உடன் சேர்ந்து நடிக்க மிகவும் ஆர்வமாக இருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் பேசுகின்றனர். லாக்கப் படம் போலவே இந்த புதிய படமும் பெரிய வெற்றி பெறும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.