செவ்வாய்க்கிழமை, ஜனவரி 28, 2025

ஹீரோக்களால் ரிஜெக்ட் செய்யப்பட்ட சின்னத்திரை நயன்தாரா.. வசமாக திருப்பிக் கொடுத்த வாணி போஜன்

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் என்னும் சீரியலின் மூலம் பல கோடி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வாணி போஜன். அந்த ஒரு சீரியலே அவருக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. அதுவரை சீரியல் நடிகையாக இருந்த வாணி போஜன் தற்போது வெள்ளி திரையில் ஏராளமான திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது அவர் முன்னணி நடிகைகளே பொறாமைப்படும் அளவுக்கு கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல் நடித்து வருகிறார். இப்படி ஒரு அசுர வளர்ச்சியா என்று அவரை தற்போது சக நடிகைகள் வியந்து பார்க்கின்றனர். ஆனால் அவர் நடிக்க வந்த புதிதில் அவருக்கு வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைத்துவிடவில்லை.

Also read: ட்ரான்ஸ்பரண்ட் உடையில் பளிச்சுனு வந்த வாணி போஜன்.. செம வைரல் புகைப்படம்

பல படங்களில் இவர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டும் இறுதியில் இவருக்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. இவர் சீரியல் நடிகை என்ற ஒரே காரணத்துக்காக பல ஹீரோக்கள் அவரை ரிஜெக்ட் செய்திருக்கின்றனர். ஆனாலும் மனம் தளராத வாணி போஜன் தனக்கான வாய்ப்புக்காக நம்பிக்கையோடு காத்திருந்தாராம்.

அதற்கு பலனாகத்தான் தற்போது அவர் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது ஒரு பேட்டியில் இந்த மோசமான அனுபவங்களை பற்றி கூறிய வாணி போஜன் மற்றொரு விஷயத்தையும் தெரிவித்துள்ளார்.

Also read: வேட்டையாடும் அருண் விஜய், விளையாடும் தமிழ் ராக்கர்ஸ் விமர்சனம்.. ஏவிஎம் ரீ-என்ட்ரி எப்படி இருக்கு?

என்னவென்றால் தன்னை ரிஜெக்ட் செய்த ஹீரோக்களே இவர் பிரபலமானதற்கு பிறகு இவரை தங்களுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்ய முன் வந்துள்ளனர். ஆனால் வாணி போஜன் தன்னை அவமதித்த ஹீரோக்களுடன் நடிக்க விரும்பாமல் அந்த வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்து விட்டாராம்.

நடிப்பு என்று வந்துவிட்டால் அனைத்து நடிகைகளும் ஒன்று தான். இதில் சின்னத்திரை, பெரியத்திரை என்று ஏன் வித்தியாசப்படுத்த வேண்டும். திறமைக்கு தான் இங்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கூறியிருக்கும் வாணி போஜன் தன்னை அவமானப்படுத்தியவர்களுடன் ஒருபோதும் இணைந்து நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அவருடைய இந்த சுயமரியாதை ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Also read: 9 படங்களில் நடித்துள்ள செல்ல குட்டி நடிகை. இந்த 3 பேரில் அடுத்த நயன்தாரா இவங்கதான்

Trending News