என்னதான் நடிகர் நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களில் ரகசியங்களை காக்க வேண்டும் என பார்த்து பார்த்து இன்டர்வியூ கொடுத்தாலும் ஏதோ ஒரு வகையில் தங்களுடைய கதாபாத்திரங்களை பற்றியோ அல்லது சில சமயம் அந்த படத்தின் முழு கதையை பற்றி உளறி விடுகின்றனர்.
அப்படி ஒரு சம்பவத்தை வாணி போஜன் செய்ததால் செம கடுப்பில் இருக்கிறாராம் கார்த்திக் சுப்புராஜ். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் ஜூன் 18-ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் ஜகமே தந்திரம் படம் நேரடியாக வெளியாக உள்ளது.
அதனைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், அவரது மகன் துருவ் விக்ரம், வாணி போஜன் ஆகியோரை வைத்து சீயான் 60 எனும் படத்தின் பாதி படப்பிடிப்புகளை முடித்து விட்டார். ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் வாணி போஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் சீயான் 60 படம் எப்படியிருக்கும் என்பது குறித்து கேட்டதற்கு, இப்படித்தான் இருக்குமென மொத்தத்தையும் உளறிவிட்டார்.
சீயான் 60 படத்தின் முதல் பகுதி முழுவதும் காதல் நிரம்பி இருக்கும் எனவும், இரண்டாம் பாதியில் அளவுக்கதிகமான ஆக்ஷன் இருக்கும் எனவும் கூறியுள்ளார். இது ஒரு காதல் கலந்த ஆக்ஷன் படம் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வளவு நாட்களாக சீயான் 60 படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் கூட வெளியிடாமல் பாதுகாத்து வந்த கார்த்திக் சுப்புராஜை கடுப்பேற்றும் விதமாக வாணி போஜன் சீயான் 60 தகவலை வெளியிட்டுள்ளது படக்குழுவினருக்கு சற்று அப்செட்டை கொடுத்துள்ளதாம்.