வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

என்ன ரொம்ப அவமானப்படுத்திட்டாங்க.. பேட்டியில் கதறிய வாணி போஜன்

சன் டிவியில் தெய்வத்திருமகள் தொடரின் மூலம் மக்கள் பிரபலமானவர் வாணி போஜன். அப்போதைய காலகட்டத்தில் சின்னத்திரை நயன்தாரா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையிலும் வாய்ப்பு கிடைக்க பல படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் வாணி போஜன் நடித்திருந்தார். அப்போது பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்கும் போது சினிமாவில் வருவதற்காக பெற்ற அவமதிப்பு மற்றும் அவமானங்களை கூறி இருந்தார்.

Also Read :கவர்ச்சிக்கு விளக்கம் கொடுத்த குடும்ப குத்து விளக்கு.. புடவையில கூட அதை தேடுவீங்களா!

அப்போது சின்னத்திரையில் இருந்து வந்ததால் பல நடிகர்கள் தன்னை ரிஜெக்ட் செய்ததாக சொல்லியிருந்தார். மேலும் நான் ஒரு நல்ல நிலைமைக்கு வந்த பிறகு அந்த நடிகர்களின் வாய்ப்பை நான் ரிஜெக்ட் செய்ததாக வாணி போஜன் அந்த பேட்டியில் கூறுகிறார்.

இந்நிலையில் வாணி போஜன் பற்றி சில கிசுகிசுக்கள் வந்துள்ளதா என பேட்டியாளர் கேட்டிருந்தார். அதாவது தமிழ் ராக்கர்ஸ் ஆடியோ லான்ச் அன்று எனக்கு உடல்நிலை சரியில்லை. அதாவது எல்லா பெண்களுக்கும் நடப்பது போல மாதவிடாய் காலகட்டத்தில் முகம், கை, கால் போன்றவை வீக்கம் அடைந்து இருந்தது.

Also Read :நீங்க சீரியல் நடிகை என ஒதுக்கப்பட்ட 5 ஹீரோயின்.. நொந்து நூடுல்ஸ் ஆன வாணி போஜன்

ஆனாலும் அந்த நிகழ்ச்சிக்கு நான் சென்றிருந்தேன். அந்தச் சமயத்தில் பத்திரிக்கையாளர்கள் வாணி போஜன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என எழுதி இருந்தனர். ஒரு சாதாரண விஷயத்தை கூட இவ்வாறு சர்ச்சையாக பத்திரிக்கையாளர்கள் எழுதியிருந்தனர்.

எனக்கு அப்போது வர முடியாத சூழ்நிலையில் இருந்தும் நிகழ்ச்சியை மறுக்க முடியாது என்ற காரணத்தினால் அதில் கலந்து கொண்டேன். ஆனால் நான் பிளாஸ்டிக் சர்ஜனை செய்து கொண்டேன் என்று எழுதியது எனக்கு மனவருத்தமாக இருந்தது என தனது ஆதங்கத்தை அந்த பேட்டியில் வாணி போஜன் கூறியிருந்தார்.

Also Read :ஹீரோக்களால் ரிஜெக்ட் செய்யப்பட்ட சின்னத்திரை நயன்தாரா.. வசமாக திருப்பிக் கொடுத்த வாணி போஜன்

Trending News