சின்னத்திரை தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை வாணி போஜன். அப்போது சின்னத்திரை நயன்தாரா என்று அவரது ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அதன் பின்பு வெள்ளித்திரையில் கதாநாயகியாக வாணிபோஜன் அறிமுகமானார். அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் இவருடைய கதாபாத்திரம் பலரால் கவரப்பட்டது.
தற்போது பல படங்களில் கமிட்டாகி ஒரு பிசியான நடிகையாக வாணி போஜன் வலம் வருகிறார். இந்நிலையில் சசிகுமாரின் சுந்தரபாண்டியன் படத்தை இயக்கியவர் எஸ்ஆர் பிரபாகர். இவர் தற்போது வெப் தொடர்களை எடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் வாணிபோஜனை வைத்த தற்போது ஒரு தொடர் இயக்குகிறார். இத்தொடர் ஜி5 தொலைக்காட்சிக்காக உருவாக்கப்பட்ட வருகிறது. ஆனால் சர்ச்சையான கதையை இயக்குனர் கையில் எடுத்துள்ளார். அதாவது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலா உறவைப் பற்றி சொல்லக்கூடிய உண்மை கதையாம்.
இவர்களுக்குள் பலகாலமாக நட்பு இருந்தது அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது ஜெயலலிதா இல்லாத சமயத்தில் இந்தக் கதையை இயக்கினால் இவரது தொண்டர்கள் மத்தியில் இது மிகப்பெரிய சர்ச்சையை வெடிக்கும். இதனால் இந்த கதையை இயக்குனர் எப்படி கையாள போகிறார் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
மேலும் வாணி போஜன் துணை கதாநாயகி கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார். விக்ரம் நடித்த மகான் படத்திலும் வாணி போஜன் நடித்திருந்தார். ஆனால் படத்தில் அவர் நடித்த காட்சிகள் அனைத்துமே நீக்கப்பட்டிருந்தது. இதனால் வாணி போஜன் மிகப்பெரிய அதிருப்தியில் இருந்தார்.
இந்நிலையில் ஏதாவது சர்ச்சை நிறைந்த கதையில் நடித்தால் பிரபலமாகலாம் என்ற எண்ணத்தில் இந்த தொடரில் ஒப்பந்தம் ஆகி இருப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஆனால் இந்த தொடரில் எந்த கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடிக்கிறார் என்பது இன்னும் மர்மமாக உள்ளது.