தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பெரிய அளவில் வெற்றி பெற்ற நடிகை என்றால் பிரியா பவானி சங்கர் தான். செய்தி வாசிப்பாளராக அறிமுகமான இவர் பின்னர் சீரியலில் களமிறங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் கைவசம் மட்டும் 10க்கும் அதிகமான படங்கள் உள்ளன.
இவர் வரிசையில் அடுத்தபடியாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர் தான் நடிகை வாணி போஜன். பிரபல சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தெய்வமகள் சீரியல் மூலம் இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்த வாணி போஜன் கடந்தாண்டு வெளியான ஓர் இரவும் படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
இருப்பினும் கடந்த ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் தான் இவருக்கு பெரிய அளவில் அறிமுகம் தந்தது. இதனையடுத்து வைபவ் உடன் இணைந்து லாக்கப் என்ற படத்திலும், ஜெய்யுடன் இணைந்து ட்ரிபிள்ஸ் என்ற வெப் தொடரிலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். இது தவிர சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் வாணிபோஜன் அடிக்கடி தனது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்.
தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள “மகான்” படத்தில் நடித்துள்ள வாணி போஜன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
![vani-bhojan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/07/vani-bhojan-1.jpg)
மேலும் இதுகுறித்து பேசிய அவர், “படங்களில் நடிப்பது ஒரு வித்தியாசமான அனுபவம். இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிப்பது டிவி சீரியல்களுக்கு பொருந்தாது. ஒரே கதாபாத்திரத்தில் 5 வருடங்கள் நடிக்க வேண்டியிருக்கும். ஹீரோவை சுற்றி அதிக நேரம் செலவிடும் வழக்கமான கதாநாயகி கதாபாத்திரத்தில் நடிக்க நான் விரும்பவில்லை. ஒரு நடிகையாக எனக்கு சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க ஆசை உள்ளது” என தெரிவித்துள்ளார்.