சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகளில் மிக முக்கியமானவர் வாணி போஜன். சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் செம வரவேற்பு பெற்றார்.
அதனை தொடர்ந்து கடந்த வருடம் அசோக்செல்வன் ரித்திகா சிங் ஆகியோருடன் இணைந்து வாணி போஜன் நடித்த ஓ மை கடவுளே திரைப்படம் செம ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து வாணி போஜன் நடிப்பில் வெளியான லாக்கப் படமும் சூப்பர் ஹிட் அடித்தது.
வாணிபோஜன் தற்போது தமிழ் சினிமாவில் கைவசம் அதிக படங்கள் வைத்திருக்கும் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அந்த வகையில் விக்ரம் பிரபு ஜோடியாக நடிக்கும் பாயும் ஒளி நீ எனக்கு என்ற படத்தின் போஸ்டர் கூட சமீபத்தில் வெளியானது.
தற்போது மீண்டும் அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தில் வாணி போஜன் ஒப்பந்தமாகியுள்ளாராம். ஓ மை கடவுளே படத்தில் இந்த ஜோடி ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்ததால் தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளார்களாம்.
அந்த படத்தை இயக்குனர் மோகன் ராஜாவின் அசிஸ்டன்ட் டைரக்டர் வெங்கட் என்பவரை இயக்குகிறாராம். முழுக்க முழுக்க காமெடி கலந்த காதல் கலாட்டாவாக இந்த படம் உருவாக உள்ளதாம். வாணி போஜன் தற்போது தமிழ் சினிமாவின் லக்கி ஹீரோயினாக மாறிவிட்டார்.
வாணி போஜன் நடிப்பில் அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் சில படங்கள் வெளிவர உள்ளன. மேலும் வெப்சீரீஸ் ஒன்றில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். வாணி போஜனுக்கும் தனக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக இருப்பதாக கருதிய அசோக் செல்வன் இந்த படத்தில் வாணி போஜன் நடித்தால் நன்றாக இருக்கும் எனக்கருதி இயக்குனரிடம் அடம் பிடித்ததாக கூறுகின்றனர்.