செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

வாணி போஜனுக்கு அடிச்ச பம்பர் பரிசு.. தேடிப்போய் வாய்ப்பு கொடுத்த முன்னணி நடிகர்

பிரியா பவானி சங்கருக்கு பிறகு சின்னத்திரை நடிகைகளில் மிகவும் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகைதான் வாணி போஜன். தற்போது மளமளவென பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் வாணிபோஜன் நடிக்கும் படங்கள் அனைத்துமே தொடர்ந்து சூப்பர் ஹிட் அடித்து வரும் நிலையில் தற்போது வாணிபோஜனை தங்களுடைய படங்களில் ஒப்பந்தம் செய்ய இளம் நடிகர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருக்கும் பிரபல நடிகரின் பட வாய்ப்பு வாணி போஜனை தேடி வந்த செய்திதான் கோலிவுட் வட்டாரங்களில் பேச்சாக உள்ளது.

ஜகமே தந்திரம் படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள திரைப்படம் சீயான்60. முதல் முறையாக சியான் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கும் இந்தப் படத்தை லலித்குமார் தயாரிக்க உள்ளார்.

சமீபத்தில் வெளியான மாஸ்டர் படத்தை தயாரித்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அடுத்ததாக உருவாகும் சீயான்60 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம் வாணி போஜன்.

vanibhojan-cinemapettai-01
vanibhojan-cinemapettai-01

ஏற்கனவே பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது முன்னணி நடிகரின் படம் வாய்ப்பு கிடைத்ததும் வாணி போஜனுக்கு தலைகால் புரியவில்லையாம். இதை பயன்படுத்தி விஜய் அஜித் படங்களின் பட வாய்ப்பை விரைவில் பெற்று விட வேண்டும் என காய் நகர்த்தி வருகிறாராம்.

Trending News