செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

ஒரு நடிகரை மட்டும் வச்சி என்ன பண்றது, நம்ம ரூட்டே வேற.. பக்கா ப்ளானுடன் இருக்கும் வாணி போஜன்

சீரியலில் நடிக்கும் நடிகைகள் அனைவருமே தற்போது சினிமாவை நோக்கி வரத் தொடங்கிவிட்டனர். ஆனால் அதற்கு அச்சாரம் போட்டது என்னமோ பிரியா பவானி சங்கர் தான். சீரியல் நடிகைகளை சினிமா ரசிகர்களும் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை நிரூபித்தவர்.

அவரைத் தொடர்ந்து சின்னத்திரை நயன்தாரா என கொண்டாடப்பட்ட வாணிபோஜன் தற்போது சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார். கடைசியாக வாணி போஜன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே, லாக்கப் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து தற்போது சீயான் விக்ரம் நடிக்கும் சீயான் 60 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தை தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் ஸ்பெஷல் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

வாணி போஜன் நடிக்கும் முதல் பெரிய படம் கூட இதுதான். இதுவரை பிரபலம் இல்லாத நடிகர்கள் ஒரு படம் இரண்டு படம் நடித்த நடிகர்களுடன் ஜோடி போட்டு கொண்டிருந்த வாணிபோஜன் முதன்முறையாக ஒரு பெரிய படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தொகுப்பாளர் தமிழ் சினிமாவில் எந்த நடிகருடன் நடிக்க ஆசை என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு வாணி போஜன் கொடுத்த பதில்தான் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சினிமாவில் ஒரு நடிகரை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது எனவும், தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுடனும் நடிக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை என குறிப்பிட்டுள்ளார். பணம் எப்படியெல்லாம் வேலை செய்யுது பார்த்தியா பையா என சமூக வலைதளங்களில் இதைக் கேட்டு கலாய்த்து வருகின்றனர்.

vanibhojan-cinemapettai
vanibhojan-cinemapettai

Trending News