செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய்க்கு ஜால்ரா தட்டிய வனிதா.. ஒட்டு மொத்த சர்ச்சைக்கும் அவங்க ஸ்டைலிலே கொடுத்த பதில்

Actress Vanitha: எப்பொழுது பிக் பாஸ்க்கு வனிதா காலடி எடுத்து வைத்தாரோ அப்பொழுதே நல்லதோ, கெட்டதோ இவருடைய புகழ் நாலா பக்கமும் காட்டுத் தீ போல் பரவிக் கொண்டே வருகிறது. இவர் என்ன பேசுகிறார் அதில் எப்படி சர்ச்சையே இழுக்கலாம் என்று கண்கொத்தி பாம்பாக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு, எந்த வித தயக்கமும் இல்லாமல் மனதில் நினைத்ததை சொல்லக்கூடிய தைரியமானவர்.

அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் வெளியான நா ரெடி தான் வரவா பாடலுக்கு ஏற்பட்ட சர்ச்சைக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது வனிதாவிடம், பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த பாடலில் புகைபிடித்தல் காட்சி வருவதைப் பற்றி கேட்டிருக்கிறார். அதற்கு நான் எவ்வளவு சிகரெட் குடித்து இருக்கிறேன் போய் பாருங்கள். நான் நடித்த எல்லா படத்திலுமே பிடித்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Also read: பகிர் கிளப்பிய வனிதா.. பீட்டர் பால் மறைந்து ஒரு மாசம் கூட ஆகவில்லை அதற்குள் 4வது காதல்

அத்துடன் இப்படத்தில் அவருடைய கேரக்டருக்கு ஏத்த மாதிரி கொண்டு வந்திருக்கிறார்கள். இதை ஒரு பொழுதுபோக்காக பார்த்துவிட்டு போகாமல் அதில் என்ன பிரச்சனையை ஏற்படுத்தலாம் என்று ஆராய வேண்டாம்.  அத்துடன் குழந்தைகளுக்கு பாதிப்படையாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் மார்வெல்ஸ், டிஸ்னி போன்ற படங்களை நீங்கள் தடை பண்ண வேண்டும்.

இதை வெறும் சினிமாவாக மட்டும் பார்த்தால் பெருசாக தெரியாது. அத்துடன் இப்ப உள்ள குழந்தைகள் ரொம்பவே தெளிவாக, அறிவாளித்தனமாக தான் இருக்கிறார்கள்.அவர்களுக்கு எது நல்லது கெட்டது என்று தெரியும். அந்த விஷயத்தில் மட்டும் பெற்றோர்கள் கவனமாக இருந்தால் போதும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார்.

Also read: 80ஸ் நாயகனுடன் வனிதா.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

மேலும் விஜய், சிகரெட் பிடிப்பதோ அல்லது மது அருந்துவதோ மாதிரி நடிக்கிற காட்சிகளை பார்த்து தான் குழந்தைகள் மனதில் நஞ்சு ஆகிறது என்று சொல்வது முட்டாள் தனம். படத்துக்கு எந்த மாதிரியான விஷயங்கள் தேவையோ அதை மட்டும் தான் நடிப்பவர்களும் சரி படத்தை இயக்குவர்களும் கவனம் செலுத்துவார்கள்.

இதில் எது நல்ல விஷயங்களோ அதை மட்டும் எடுத்துவிட்டு தேவையில்லாத விஷயத்தை விட்டால் அதுவே பாதி பிரச்சனைக்கு தீர்வாகும் என்று கூறியிருக்கிறார். அத்துடன் விஜய் எவ்வளவு பெரிய ஹீரோ அவரை இந்த மாதிரி விஷயத்தை வைத்து பேசி தேவையில்லாமல் அவருடைய இமேஜ் மற்றும் அரசியல் வாழ்க்கையை பாழாக்குவதற்கு பலரும் போட்ட பிள்ளையார் சுழி.  என்று கூறி இவருடைய ஸ்டைலில் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் பதிலளித்து நல்லாவே விஜய்க்கு ஜால்ரா அடித்திருக்கிறார்.

Also read: எங்க வீட்டு குட்டி அரிசி மூட்டைக்கு 14 வயசாகிடுச்சு.. 2வது கணவரின் மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய வனிதா

Trending News