பேசாமல் வனிதா விஜயகுமார் தன்னுடைய பெயரை சர்ச்சை விஜயகுமார் என மாற்றிக் கொள்ளலாம். அந்த அளவுக்கு வனிதா எங்கு சென்றாலும் சர்ச்சையாகவே உள்ளது. முன்னதாக மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு அடுத்த சில மாதங்களிலேயே அவரை விரட்டி விட்டார்.
அது அவரது சொந்த பிரச்சனை என விட்டுவிடாமல் சில நடிகைகள் வனிதாவின் மூன்றாவது திருமணத்தை கேலி செய்ய வந்தது பாரு கோபம். நேரலை என்று கூட பார்க்கவில்லையே. போடி வாடி என கண்டபடி பேசிவிட்டார் வனிதா.
எப்போதுமே சர்ச்சையான ஆட்களை தேடி தேடிப் பிடிப்பதில் விஜய் டிவியை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை களமிறங்கி நல்ல டிஆர்பி பார்த்தது.
வனிதா தான் இப்போதைக்கு நம்முடைய டிஆர்பி என்பதை உணர்ந்து கொண்ட விஜய் டிவி தொடர்ந்து வனிதாவுக்கு தன்னுடைய சேனலில் வாய்ப்பு கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதில் அவருக்கும் ரம்யா கிருஷ்ணனுக்கு பஞ்சாயத்து ஏற்பட்டது.
அதை வைத்துதான் விஜய் டிவி வண்டியை ஓட்டிக் கொண்டு இருக்கிறது. இது ஒருபுறமிருக்க, விரைவில் வனிதா நான்காவது திருமணம் செய்து கொள்வார் எனவும், அவருடைய நான்காவது கணவரின் பெயர் “எஸ்” என்ற எழுத்தில் தொடங்கும் எனவும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
திருமணம் மட்டுமல்ல, வனிதா அரசியலுக்கு வந்தாலும் ஜெயலலிதா போல் சாதனை படைப்பார் என கூறியுள்ளார் அந்த ஜோதிடர். உண்மையாலுமே அவர் ஜோதிடரா, இல்லை வனிதா சார்பில் உருவாக்கப்பட்ட ஜோதிடரா என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.