வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வனிதாவால் நடுத்தெருவுக்கு வந்த ராஜ்கிரண்.. மாணிக்கம் படத்தின் போது ஏற்பட்ட நெருக்கம்

தமிழ் சினிமாவில் நயன்தாராவுக்கு முன் அதிக சர்ச்சைகளில் சிக்கிய நடிகை என்றால் அது நடிகை வனிதா தான். பிரபல நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள். இவருக்கும் திருமணத்திற்கும் ஏக பொருத்தம்.

இதுவரை ஏகப்பட்ட திருமணங்கள், சில காதல்கள் என தன் வாழ்க்கையை எப்போதுமே ஒரு கமிட்மென்ட்டில் வைத்துக் கொள்வார். சமீபத்தில்கூட மூன்றாவது முறையாக பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து அடுத்த ஒரு மாதத்திலேயே அடித்துத் துரத்திவிட்டார்.

இப்படிப்பட்ட வனிதா நடிகர் ராஜ்கிரனையும் அந்த காலத்தில் விட்டுவைக்கவில்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். ராஜ்கிரணும் வனிதாவும் இணைந்து மாணிக்கம் என்ற படத்தில் நடித்திருந்தனர்.

அதுவரை வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் நல்ல நடிகராகவும் வலம் வந்த ராஜ்கிரணுக்கு முதல் அடி இந்த படம்தான். மாணிக்கம் படத்தில் நடித்தபோது ராஜ்கிரணுக்கும் வனிதாவுக்கும் இடையில் நெருக்கம் அதிகமாகி விட்டதாக கிசுகிசு வெளியானது.

அதனை தொடர்ந்து தன்னுடைய பெற்றோர்களிடம் சண்டை போட்டுக் கொண்டு பிரிந்து தனியே வந்துவிட்டாராம். அதன்பிறகு வனிதாவை அவரது குடும்பத்துடன் சேர்த்து வைக்க ராஜ்கிரண் அவருடன் நெருங்கிப் பழகினாராம். இவையெல்லாம் அந்த கால பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி.

வனிதா உடன் பழகிய கொஞ்ச நாட்களிலேயே ராஜ்கிரன் பெரும் கடனாளி ஆகிவிட்டதாகவும், அந்தக் கடனை அடைக்க தன்னால் வளர்க்கப்பட்ட வடிவேலுதான் உதவி செய்ததாகவும் செய்திகள் வந்தன. அதன் பிறகு படம் தயாரிக்காமல் கிடைக்கும் சின்னச் சின்ன வாய்ப்புகளில் நடித்து தற்போது நல்ல நிலையில் உள்ளார் என்பது குறிப்பிடவேண்டிய ஒன்று என்கிறார்கள் நம்ம கோலிவுட் வாசிகள்.

vanitha-cinemapettai
vanitha-cinemapettai

Trending News