ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

குஷ்புவை பார்த்து அட்டை காப்பி அடித்த வனிதா.. கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். இப்படத்திற்குப் பிறகு இவர் மாணிக்கம், காக்கை சிறகினிலே, சும்மா நச்சுன்னு இருக்கு மற்றும் நானும் ராஜாவாகப் போகிறேன் போன்ற படங்களில் நடித்தார் இருப்பினும் ஒரு சில படங்கள் மட்டுமே இவருக்கு வெற்றியை கொடுத்தன.

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சிலரின் போற்றலுக்கும் பலரின் தூற்றலுக்கும் ஆளானார். அதன்பின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல ரசிகர்களை சம்பாதித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு இவருக்கு அடுத்தடுத்து நிறைய பட வாய்ப்புகள் வந்தன.

தற்போது இவர் பிரஷாந்த் நடிக்கும் அந்தகன், மற்றும் அனல் காற்று, சிவப்பு மனிதர்கள் உட்பட மொத்தம் 8 தமிழ் படங்களில் நடித்து வருகிறார். நடிகை வனிதா பல சர்ச்சைகளில் சிக்கி வந்தாலும், தன்னுடைய வேலையினை மிகவும் மகிழ்ச்சியாக செய்து வருகின்றார்.

சமீபத்தில் இவர் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவராக இருந்த ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதம் ஏற்பட்டு பிரபல டிவியிலிருந்தும் குறித்த நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேறினார். இந்நிலையில் சமீபத்தில் மற்றொரு தொலைக்காட்சியில் இணைந்துள்ள இவர், ஒரு ஷோவில் தான் நடுவராக இருக்கும் போட்டோவை வெளியிட்டார்.

அந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் ரம்யாகிருஷ்ணனுக்கு போட்டியா என்று கேலி செய்தனர். தற்போது மீண்டும் அட்டகாசமான மேக்கப்புடன் உடல் எடை கொஞ்சம் குறைந்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

vanitha
vanitha

இதனை பார்த்த ரசிகர்கள் குஷ்புவிற்கு போட்டியா என்றும், என்னதான் ஸ்லிம் ஆனாலும் அந்த ரப்பர் வாய் மட்டும் மாறாது, குஷ்புவை பார்த்து காப்பி அடித்து பிரபலமாகலாம் என நினைக்கிறீர்களா என்று பயங்கரமாக கேலி செய்து வருகின்றனர்.

Trending News