புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டாட்டூ போடும், தம்மடிக்கும் அத கேக்க நீ யாரு.. பெத்துவிட்டதெல்லாம் நேந்துவிட்ட மாதிரி ஆடாத, விலாசிய வனிதா

Vanitha: வத்திக்குச்சி வனிதா ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இப்போது அவரது மகள் ஜோவிகாவை ஒரு போட்டியாளராக சீசன் 7ல் அனுப்பி வைத்திருக்கிறார். ‘அவர் வனிதா ரத்தம்டா, வாயாடி பெத்த பொண்ணுடா!’ என்பதை பிக் பாஸ் வீட்டில் ஜோவிகா நிரூபித்துக் கொண்டிருக்கிறார். வெளியில் இருந்துகொண்டு வனிதாவும் பிக் பாஸ் வீட்டில் நடப்பதை குறித்து விமர்சிக்கிறார்.

அதிலும் அவருடைய தோழி விசித்ராவை வெளுத்து வாங்குகிறார். கடந்த வாரம் விசித்ரா ஜோவிகாவின் கல்வி குறித்து பேசினார். ஒரு கட்டத்தில் அது பெரும் வாக்குவாதமாக முற்றியது. என்னுடைய குழந்தை மாதிரி நினைச்சு தான் ஜோவிகாட்ட பேசினேன், ஆனா அவ ஒரு போட்டியாளர் மாதிரி என்னை பார்க்கிறார் என்று விசித்ரா அழுது புலம்பினார். இதை வீட்டிற்கு வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த வனிதா, சமீபத்திய பேட்டியில் விசித்ராவை விளாசியுள்ளார்.

Also Read: முதல் முறையாக திமிரு பேச்சுக்கு ஸ்ட்ரைக் அடித்து விட்ட பிக் பாஸ் 7.. இந்த பொழப்புக்கு வெளியே தூக்கி இருக்கணும்

பிக் பாஸ் வீட்ல இருக்க பொண்ணுங்க டாட்டூ போடுது, தம் அடிக்குது, இது எல்லாத்தையும் அவங்க பெற்றோர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஆனா அங்க இருக்கிற பிள்ளைங்களை எல்லாம் நீங்கதான் பெத்து விட்ட மாதிரி ஓவரா அக்கறைப்பட வேண்டாம்.

பெத்து விட்ட பிள்ளைகளை எல்லாம் உங்களுக்கு என்ன நேந்தா விட்டிருக்காங்க. நீங்கள் மூன்று பசங்களோட தாய் என்பதற்காக அங்கு இருக்கிற பிள்ளைகளை ஓவரா கரெக்ஷன் பண்ண வேண்டாம். நீங்க முதலில் உங்க பிள்ளைங்களை பாருங்க. எதுக்காக நீங்க 100 நாள் பிக்பாஸ் வீட்டிற்குள் போனங்க. உங்க பிள்ளைங்க வெளியில என்னென்னமோ பண்ணுகிறார்கள்.

Also Read: பிக்பாஸில் முதல் ஆளாக வெளியேற போவது அனன்யா இல்லையாம்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட் வைத்து அனுப்பிய கமல்

நீங்க வந்து உங்க பிள்ளைகளை பாருங்க, அங்க இருக்க பிள்ளைகளைப் பார்த்துக்க தாய் தந்தை இல்லைன்னு யார் சொன்னா! உங்க வேலைய மட்டும் பாருங்க, நீங்க ஒரு போட்டியாளராகத்தான் அந்த வீட்டில் இருக்கிறீர்கள். அதைத் தவிர வேறு எந்த உறவையும் வளர்க்க வேண்டாம். தேவை இல்லாமல் விளையாட்டில் பெற்றோர்களை எல்லாம் இழுக்க கூடாது. ஜோவிகா கூட இதை ஆணித்தரமாக சொன்னார்.

அதோடு மரியாதை என்பது ஒருவர் செய்ற செயலை பார்த்து கொடுக்கணும், அதக் கேட்டு வாங்க கூடாது என்று வனிதா சோசியல் மீடியாவில் விசித்ராவை விலாசுகிறார். இவருடைய பேட்டியை கேட்ட பிக் பாஸ் ரசிகர்கள், ‘நீயும் பிக் பாஸ் வீட்ல இருக்கும்போது இப்படி தான் பண்ண’ என்று பதிலடி கொடுத்தனர்.

Also Read: விசித்ரா, ஜோவிகா யார் பக்கம் நியாயம்.. அனல் பறக்கும் ஆண்டவரின் தீர்ப்பு

Trending News