வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பி.பி ஜோடியில் இருந்து வெளியேறிய வனிதா.. காரணம் தெரியுமா.?

ஆரம்ப காலத்தில் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான வனிதா மீண்டும் சின்னத்திரை மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். பிக் பாஸ் சீசன் 3 மூலம் பரபரப்பான நடிகையாக வலம் வந்தார். இவரது அதிரடி பேச்சை எதிர்கொள்ள பலரும் தயங்கி வந்தனர். பிக்பாஸை தொடர்ந்து குக் வித் கோமாளி கேபிஒய் சாம்பியன்ஸ் என தொடர்ந்து ரியாலிட்டி ஷோக்களில் பங்கு பெற்று வந்தார்.

தற்போது பி.பி ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று, சுரேஷ் சக்கரவர்த்தியுடன் ஜோடி சேர்ந்து நடனமாடி வந்தார். கடந்த எபிசோடில் வனிதா விஜயகுமாரும், சுரேஷ் சக்ரவர்த்தியும் செமையாக நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்த நிலையில், திடீரென நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக வனிதா விஜயகுமார் அறிவித்துள்ளார்.

மேலும், இந்த நிகழ்ச்சியில் தனது வளர்ச்சியை பிடிக்காதவர்கள் செய்யும் செயல்களால் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் “பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேறும் முன், நான் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை அனைவரும் உணர வேண்டும் என நினைத்தேன். பிக் பாஸ், குக் வித் கோமாளி என பல நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கெடுத்து வந்தேன்.

எல்லாம் சரியாக சென்று கொண்டிருந்த சமயத்தில், பணியாற்றும் இடத்தில் நம்மை தரக்குறைவாக இழிவுப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. பணியிடத்தில் நான் துன்புறுத்தப்பட்டேன், வம்புக்கு இழுக்கப்பட்டேன். ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் சக பெண்களை பொறாமையின் பேரில் கொச்சைப்படுத்துவது தொடர்ந்து நடந்து வருகின்றது.

vanitha-jodi
vanitha-jodi

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி எனக்கு ஒரு நல்ல பார்ட்னராக இருந்தார். என்னை மன்னித்துவிடுங்கள், சுரேஷ். என்னுடைய முடிவால் இனி இந்நிகழ்ச்சியில் நீங்கள் தொடர முடியாமல் வெளியேறும் சூழல் உருவாகியுள்ளது” என்று வனிதா பதிவிட்டிருந்தார்.

வனிதாவையும் சர்ச்சையையும் தனித்தனியா பிரிக்கவே முடியாது போல, இவங்கள சுத்தி எப்பவுமே ஒரு சர்ச்சை இருந்துகிட்டே இருக்கு.

Trending News