திங்கட்கிழமை, மார்ச் 17, 2025

உன் புருஷன் யாருனு கேட்குறாங்க…? வேதனையில் வனிதா.

நடிகை வனிதா சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்திருந்தார். தான் மோசமாக நடத்தப்பட்டதால், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டிருந்தார்.

தற்போது அன்பு சரவணன் இயக்கத்தில் சிவப்பு மனிதர்கள் படத்தின் படப்பிடிப்பில் வனிதா விஜயகுமார் கலந்துக் கொண்டு வருகிறார். இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் செய்தியாளர்களை சந்தித்த வனிதா, “கொரோனா நோயை கண்டு பயப்படாமல் இருப்பது மிகவும் நல்லது. சமூக இடைவெளியுடன் வேலை நேரத்தில் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெகு நாட்களுக்கு பிறகு படப்பிடிப்புகளில் சக நடிகர்களுடன் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

நான் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்தது எனது தனிப்பட்ட காரணம். எனது சுயமரியாதையின் அடிப்படையிலேயே நிகழ்ச்சியில் இருந்து என்னை விடுவித்துக் கொண்டேன். சமூக வலைதளத்தில் நிறையத் தவறுகள் நடக்கிறது. தனிப்பட்ட விஷயங்களில் தான் தவறாகப் பேசுகிறார்கள்.

நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு நின்றால், யார் உன் புருஷன் எனக் கேட்கிறார்கள்’ என்று மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

Trending News