திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

காரசாரமான பிக்பாஸ் அல்டிமேட் நாமினேஷன்.. முதல் வாரத்தில் வெளியேற போவது இவர் தான்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் இல் 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. கடந்த பிக்பாஸ் ஐந்து சீசன்களிலும் பங்குபெற்ற போட்டியாளர்களில் சில தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் அல்டிமேட் சென்றுள்ளார்கள்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த சீசன்களில் அதிக நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றவர்களே பெரும்பாலானோர் இதில் பங்கு பெறுகிறார்கள். இதனால் இந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் சண்டைக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிகழ்ச்சியில் வனிதா விஜயகுமார் முதல் போட்டியாளராக பிக்பாஸ் அல்டிமேட் வீட்டிற்குள் நுழைந்தார். அவரைத் தொடர்ந்து நீருப், ஜூலி, அபிராமி, தாமரை, தாடி பாலாஜி, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், சுஜா வருணி, சுரேஷ் சக்ரவர்த்தி, ஷாரிக், அபிநய், சுருதி, சினேகன் ஆகிய 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளார்கள்.

எப்போதும் பிக்பாஸில் முதல் வாரம் எலிமினேஷன் இருக்காது என்ற நிலையில், பிக் பாஸ் அல்டிமேட்டில் எல்லோரும் தெரிந்த முகம் என்பதால் முதல் வாரம் இன்று நாமினேஷன் நடைபெறுகிறது. இதில் பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ் வனிதா மற்றும் அனிதாவை நாமினேட் சொல்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் அனிதா வனிதாவையும், வனிதா அனிதாவையும் நாமினேட் செய்கிறார். அதேபோல் ஜூலி, சினேகன், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோரும் நாமினேட் லிஸ்டில் இடம் பெறுகிறார்கள்.

ஒவ்வொரு சீசனிலும் டஃப் கன்டஸ்டன்ட் ஆக பார்க்கப்படும் இந்த போட்டியாளர்கள் முதல் வாரமே நாமினேட் ஆகியுள்ளார்கள். பெரும்பாலான போட்டியாளர்கள் வனிதாவை நாமினேட் செய்தாலும் முதல் வாரத்திலேயே வனிதா வெளியேற வாய்ப்பு இல்லை. டிஆர்பிகாகவே வனிதா பல வாரங்கள் பிக்பாஸ் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Trending News