வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

80ஸ் நாயகனுடன் வனிதா.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

Vanitha Vijayakumar: சினிமாவில் கதாநாயகியாக வனிதா விஜயகுமார் நடித்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான். வத்திக்குச்சி வனிதா என்று இவருக்கு பட்டப்பெயரும் வைத்தனர். ஏனென்றால் பிக் பாஸில் வெடிக்கும் பல பிரச்சனைகளுக்கு இவர் தான் ஆரம்ப புள்ளியாக இருப்பார்.

இந்நிலையில் பிக் பாஸ்க்கு பிறகு அவருடைய வாழ்க்கையே ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. அதே தொலைக்காட்சியில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கிடைத்தது. அதோடு மட்டுமல்லாமல் சொந்தமாக தொழிலும் தொடங்கி உள்ளார். மேலும் யூடியூபில் ஒரு சேனல் தொடங்கி அதன் மூலமும் கல்லா கட்டி வருகிறார்.

Also Read : வெறும் அட்ஜஸ்ட்மெண்டால் பட வாய்ப்பை இழந்த பிக்பாஸ் நடிகை.. ஓபனாக பேசிய பயில்வான்

வெள்ளிதிரையிலும் ஒரு சில படங்களை வனிதா கைவசம் வைத்துள்ளாராம். அதன்படி பவர் ஸ்டார் சீனிவாசன் உடன் இணைந்து ஒரு படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது எண்பதுகளின் கதாநாயகன் ஒருவருடன் வனிதா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் காட்டுத் தீயாய் பரவி வருகிறது.

அதாவது 80களில் ஒட்டுமொத்த பெண் ரசிகர்களையும் கவர்ந்தவர் தான் மைக் மோகன். அவருடைய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் தான் இப்போதும் ரசிகர்கள் கேட்டு தூங்கும் பாடல்களாக உள்ளது. தனது மார்க்கெட்டை இழந்த பிறகு மோகன் படங்களில் நடிப்பதை நிறுத்திக் கொண்டார். அதுமட்டுமின்றி மீண்டும் நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிப்பேன் என்று முடிவெடுத்திருந்தார்.

Also Read : இணையத்தில் பயங்கர ட்ரெண்டாகிக் கொண்டிருக்கும் பெண்.. பிக் பாஸ் போட்டியாளராக லாக் செய்த விஜய் டிவி

அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் என்ட்ரி கொடுத்து கதாநாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இப்போது வனிதா உடன் மோகன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் காரணமாக இருவரும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்களா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ஆனால் அந்த புகைப்படத்தில் மோகன் டி-ஷர்டில் ஷோமேட்டோ நிறுவனத்தின் பெயர் போடப்பட்டுள்ளது. ஆகையால் இது ஏதும் விளம்பரத்திற்கான புகைப்படமா என்பது தெரியவில்லை. ஆனால் விரைவில் எதற்காக இந்த புகைப்படம் எடுக்கப்பட்டது என்ற தகவல் வெளியாக உள்ளது.

mohan-vanitha-vijayakumar
mohan-vanitha-vijayakumar

Also Read : எங்க வீட்டு குட்டி அரிசி மூட்டைக்கு 14 வயசாகிடுச்சு.. 2வது கணவரின் மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய வனிதா

Trending News