சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

இப்படி பேசுறவங்கள செருப்பால அடிப்பேன்.. கொதித்தெழுந்த வனிதா.. எதுக்கு தெரியுமா?

விஜய் டீவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் தொகுப்பாளர் மணிமேகலைக்கும் அதில் பங்கேற்பாளராக வந்த பிரியங்காவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் பூகம்பமாக மாறி, சோசியல் மீடியாவில் நான் ஸ்டாப்பாக சுழன்று வருகிறது. தற்போது ஒரு இரண்டு மூன்று நாட்களாக தான் இந்த அலை ஓய்ந்து உள்ளது.

சமீபத்தில், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளர் மணிமேகலைக்கும், தொகுப்பாளராக இருந்து பிரபலமடைந்து தற்போது நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று வந்த பிரியங்காவிற்கும் பிரச்சனை வெடித்தது. இதனால், நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே பாதியில் வெளியேறிய மணிமேகலை, பின்னர் நிகழ்ச்சியிலிருந்து முற்றிலும் வெளியேறுவதாக அறிவித்தார். மேலும் இது தொடர்பாக நீண்ட அறிக்கையும் விடீயோவையும் மணிமேகலை வெளியிட்டதை தொடர்ந்து பிரச்சனையை பூதகரமானது.

இதையடுத்து, பல்வேறு விதமான தனிப்பட்ட தாக்குதல்கள், காது கொடுத்து கேட்க முடியாத கமெண்டுகள், குடும்ப உறுப்பினர்களை அவமானப்படுத்துவது போன்ற பல நிகழ்வுகள் நடந்தது. இது குறித்து குக் வித் கோமாளி செட்டில் இருந்த குரேஷி, சுனிதா, புகழ், தர்ஷன் என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அதே வகையில், விஜய் டிவி பிரபலங்களான அமீர், அர்ச்சனா, தாமு, மாகாபா ஆனந்த் உள்ளிட்டோரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, மணிமேகலை பேசுவது தவறாக உள்ளது. சொம்பு என குறிப்பிட்டு பிறரை தாக்குவது மிக மோசமான செயல் எனக் வனிதா விஜயகுமார் கூறி இருந்தார். “மணிமேகலைக்கும் பிரியங்காவுக்கும் நடந்த சண்டையை மீடியா தான் பெரிதாக்கிவிட்டது. ஆனால் இந்த விவகாரத்தால் ஒன்றுமட்டும் நன்றாக தெரிகிறது. மணிமேகலை கணவருடன் இருக்கிறார். அதனால், அவருக்கு சுயமரியாதை உண்டு. கணவரோடு இல்லாதவருக்கு சுயமரியாதை இல்லை எனக் கூறுகின்றனர். அப்படி சொல்பவர்களை செருப்பால் மட்டும் இல்லை எதனால் வேண்டுமானாலும் அடிக்கலாம்.” என்று பொங்கி எழுந்துள்ளார் வனிதா.

பல நேரங்களில் வனிதா சர்ச்சையாக பேசினாலும், சில நேரங்களில் கருத்தாக பேசுவார். அப்படி தான் தற்போதும் பேசியுள்ளார். மேலும், “பிரியங்காவின் கணவர் அவரை விட்டுவிட்டு போகவில்லை. அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டார்கள். ஒருவர் பிரிவதற்கும் அந்தப் பெண்ணின் கேரக்டருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது” என கடுப்பாக தெரிவித்தார்.

Trending News