ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

வனிதா உதவியோடு இறுதி வாரத்தில் களமிறங்கி இருக்கும் மாயா.. Bully Gang ஸ்கூலுக்கு அக்கா தான் ஹெட்மாஸ்டர் போல

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பார்வையாளர்கள் மொத்த பேரும் அர்ச்சனா தான் இந்த சீசனின் வின்னர் என முடிவு எடுத்து விட்டார்கள். ஆனால் இறுதி நாளில் கூட ஓட்டில் வித்தியாசத்தை கொண்டு வரலாம் என்ற முயற்சியில் மாயா ஸ்குவாட் இறங்கி இருக்கிறது. இதற்கு அஸ்திவாரமாக அவர்கள் கையில் எடுத்திருப்பது தான் வனிதா விஜயகுமார்.

வனிதாவுக்கும் பிக் பாஸுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்டால் அவர் சீசன் 3 நிகழ்ச்சியின் போட்டியாளர். அதுவும் ஒரு சில வாரங்களிலேயே போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டவர். பிக் பாஸ் மூலம் தனக்கு வாய்ப்புகள் கிடைத்ததை புரிந்து கொண்டு இவரே பிக் பாஸ் விமர்சகராகவும் மாறிவிட்டார். போதாத குறைக்கு தன் மகள் ஜோவிகாவை இந்த சீசனில் உள்ளே அனுப்பி மொக்கையும் வாங்கினார்.

ஜோவிகா பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட ஒரு சில நாட்களில் பரவாயில்லை இவர் வனிதா அளவுக்கு மோசம் இல்லை என்ற பாராட்டையும் பெற்றார். அதை கடந்த சில வாரங்களில் யப்பா இதுக்கு வனிதாவே பரவாயில்லை என்ற விமர்சனத்திற்கு உள்ளானார். ஜோவிகாவின் வெற்றிக்கு முழுக்க முழுக்க தடையாய் இருந்தது மாயா மற்றும் பூர்ணிமா என்பது வெளியில் இருந்த பார்வையாளர்கள் அத்தனை பேருக்கும் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது.

Also Read:இறுதிவரை வன்மத்தை கக்கும் மாயாவின் விழுதுகள்.. அர்ச்சனாவுக்கு எதிராக கூட்டு சதியில் சேர்ந்த பிக்பாஸ்

இந்த விஷயம் வனிதா மற்றும் அவருடைய மகளுக்கு மட்டும் எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. வெற்றி, விமர்சனம் என்பதை எல்லாம் தாண்டி பணமிருந்தால் போதும் என்பதை முடிவெடுத்து விட்டார் போல வனிதா. இப்போது மாயாவுக்காக வெளியில் வேலை செய்யும் பி ஆர் களில் ஒருவராகத் தான் வனிதா இருக்கிறார். கடந்த சில தினங்களாகவே வெளிப்படையாக மாயாவுக்கு சொம்பு அடித்து வருகிறார்.

சொம்பு தூக்கும் வனிதா விஜயகுமார்

அர்ச்சனாவை தன்னால் முடிந்தவரை தப்பான பெண்ணாக காட்டுவதற்கு தான் வனிதா தன்னுடைய விமர்சனத்தை பயன்படுத்தி வருகிறார். வனிதா சொம்பு தூக்கினால், அவருடைய மகள் இப்போது கெஸ்ட் ஆக உள்ளே போய் மாயாவுக்கு அண்டாவை தூக்க ஆரம்பித்து விட்டார். உள்ளே போனதும் ஒன்றாக இருந்த அர்ச்சனா மற்றும் மாயாவை பிரித்து விட்டு விட்டார். அவர்கள் நினைத்தது அர்ச்சனாவின் முகத்திரையை கிழிக்கலாம் என்று, உண்மையில் கடைசி வாரத்தில் அர்ச்சனாவின் ஓட்டுகளை ஏற்றுக் கொண்டிருப்பதை இந்த Bully Gang தான்.

சரவண விக்ரம், அனன்யா, அக்ஷயா என அத்தனை பேருக்கும் பயங்கரமாக மூளை சலவை செய்து அனுப்பி வைத்திருக்கிறார்கள். இவர்கள் உள்ளே வந்ததிலிருந்து மாயா ஏதோ தியாகி போலவும், அர்ச்சனா சதிகாரி போலவும் சித்தரிக்கப்பட்டு வருகிறது. உள்ளே இவர்கள் தங்களுடைய வேலையை காட்டிக் கொண்டிருக்க, வெளியே வனிதா விஜயகுமார் மாயாவுக்காக பக்காவாக ஸ்கெட்ச் போட்டு வேலை செய்து வருவது பார்ப்பதற்கே மட்டமாக இருக்கிறது.

Also Read:நோ சூடு, நோ சொரணை.. மாயாவுக்கு ஜால்ரா தட்டும் மிக்சர் பார்ட்டி

Trending News