புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

துக்கம் தொண்டையை அடைக்கும் அளவிற்கு அழும் வனிதா.. கூடிய சீக்கிரம் நானும் வரேன்!

Actress Vanitha: நடிகை வனிதா ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் அவரை பெரிதாக அங்கீகரிக்கப்படாமல் தான் இருந்து வந்தார். இப்படி ஒரு கேரக்டர் இருக்கு என்று நம்மளுக்கு காட்டி கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதற்கு காரணம் அவர் உள்ளே சென்று பண்ணின வேலைகள் வெளியில் சர்ச்சையாக வெடித்தது.

இதனைத் தொடர்ந்து இவருடைய திருமண வாழ்க்கையும் சர்ச்சையில் சிக்கி அனைவரும் பேசும் பொருளாக மாறிவிட்டது. இப்படி பல பிரச்சினைகளை சந்தித்து வந்த இவர், தற்போது இவருடைய அம்மா மஞ்சுளா இல்லாததை நினைத்து ரொம்பவே ஃபீல் பண்ணி கொண்டு வருகிறார். அதாவது என்னுடைய அம்மா இறந்து பத்து வருடமாகிறது.

Also read: எங்க வீட்டு குட்டி அரிசி மூட்டைக்கு 14 வயசாகிடுச்சு.. 2வது கணவரின் மகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய வனிதா

இன்று வரை அதை நினைத்து வருத்தப்பட்டு வருகிறேன் என்று தனது சோகத்தை பகிர்ந்து உள்ளார். அம்மா நீ எனக்கு கொடுத்த தைரியத்தால் தான், நான் இப்போது வரை தனியாக இருந்தாலும் துணிச்சலுடன் போராடி வாழ்க்கையை நடத்திக் கொண்டு வருகிறேன். அதற்கு உங்களுக்குத் தான் ரொம்ப நன்றி அம்மா என்று சொல்லி இருக்கிறார்.

மேலும் நீ சினிமாவில் எந்த அளவுக்கு ஜெயித்தியோ, அதே மாதிரி நான் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக ஜெயிக்க ஆரம்பித்து விட்டேன். கூடிய விரைவில் சினிமாவில் எனக்கான ஒரு இடத்தை அடைந்து விடுவேன் என்று கூறியிருக்கிறார். மேலும் நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுகிறேன் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியவில்லை.

Also read: அவர் என் கணவனே இல்ல, திடீரென குண்டைத் தூக்கிப் போட்ட வனிதா.. இறந்த பின்னும் இப்படியா அவமானப்படுத்துவது

கூடிய விரைவில் நான் உன்னை பார்க்க வந்து விடுவேன். அப்பொழுதாவது என்னுடைய பாசம் உனக்கு புரியும் என்று மனவேதனையை கொட்டி தீர்த்து இருக்கிறார். இப்படி இவர் கூடிய சீக்கிரம் வந்து பார்க்கிறேன் என்று சொன்னதில் உள்ள அர்த்தம் அனைவருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இப்படி சொல்லி இருக்கிறார். இவர் சொன்ன மாதிரி உண்மையிலேயே கூடிய விரைவில் செத்து விடுவாரோ என்று பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.

அத்துடன் இவர் பேசியதை கேட்ட ரசிகர்கள் நீங்க ஒன்னும் உங்க அம்மா மாதிரி இல்லவே இல்லை. உங்க அம்மா மாதிரி இருக்கிறது உங்களுடைய தங்கச்சி ஸ்ரீதேவி மட்டும் தான் என்று இவர் பேசியதற்கு நக்கல் அடித்து வருகின்றனர். ஆனாலும் நக்கலாக இருந்தாலும் இதுதான் உண்மையான விஷயம் கூட. ஏன் இப்படி தற்போது அனுதாபத்தை தேடி வருகிறார் என்று பலரும் குழப்பத்தில் இருக்கிறார்கள்.

Also read: சமந்தாவை போல் வனிதாவுக்கு இருக்கும் விசித்திர நோய்.. அவரே வெளியிட்ட சீக்ரெட்

Trending News