திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

டீன் ஏஜ் பெண்ணாக மாறிய வனிதாவின் மகள்.. கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் புகைப்படம்

Vanitha Vijayakumar: நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் வாரிசான வனிதா விஜயகுமார் ஆரம்பத்தில் கதாநாயகியாக படத்தில் அறிமுகமானார். ஆனால் சில வருடங்களிலேயே சினிமாவை விட்டு விலகி திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு அடுத்தடுத்த திருமணத்தால் மிகவும் சர்ச்சைக்குரிய நடிகையாக மாறினார்.

அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி தான். இவர் கலந்து கொண்ட சீசனில் ஏதாவது பிரச்சனை என்றால் அதற்கு வனிதா தான் ஆரம்ப புள்ளி என்று பேசப்பட்டு வந்தது. அதோடு மட்டுமல்லாமல் வனிதாவால் விஜய் டிவி டிஆர்பியும் எக்கச்சக்கமாக ஏற தொடங்கியது. இதனால் தங்களுடைய அடுத்த நிகழ்ச்சிகளிலும் வனிதாவை பங்கேற்க வைத்திருந்தனர்.

Also Read : வெள்ளித்திரையில் ஜொலிக்கும் 5 விஜய் டிவி பிரபலங்கள்.. ஜெயிலரால் ஏறிய நெல்சனின் மவுசு

இவ்வாறு பிரபலமான வனிதா சொந்தமாக தொழில் தொடங்க ஆரம்பித்தார். இந்நிலையில் வனிதாவுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். அதில் வனிதா மற்றும் அவருடைய மகன் இடையே பிரச்சனை காரணமாக தனது தாத்தா விஜயகுமார் வளர்ப்பில் இருக்கிறார். மேலும் வனிதாவின் இளைய மகளும் அவருடைய அப்பாவின் பாதுகாப்பில் இருக்கிறார்.

இந்நிலையில் ஜோவிகா மட்டும் தான் வனிதா உடன் இப்போது இருக்கிறார். இப்போது படங்களிலும் பிசியாக இருக்கும் வனிதா யூடியூப் சேனல் மூலம் சம்பாதித்து வருகிறார். ஏற்கனவே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர் பட்டத்தை அடித்த வனிதா நன்கு சமைக்க தெரிந்தவர் என்பதால் சமையல் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Also Read : பிக்பாஸ் சீசன் 7ல் களமிறங்கும் நான்கு கதாநாயகிகள்.. டிஆர்பிக்காக விஜய் டிவி போட்ட பக்கா பிளான்

அம்மாவுக்கு மகள் சளைத்தவர் இல்லை என்பது போல வனிதாவின் மகளும் நிறைய சமையல் வீடியோக்களை போட்டு வருகிறார். மேலும் வனிதாவின் இன்ஸ்டா பக்கத்தில் அவரது மகளின் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கிறார். இப்போது டீன் ஏஜ் பெண்ணாக மாறிய ஜோவிகா ஹீரோயின் மெட்டீரியலாக உள்ளார்.

டீன் ஏஜ் பெண்ணாக மாறிய ஜோவிகா

jovika
jovika

ஆகையால் வனிதா விரைவில் தனது மகளை சினிமாவிற்கு அறிமுகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சினிமாவில் தான் சாதிக்க முடியாததை தனது மகள் மூலம் வெற்றிக்கான வேண்டும் என்ற முடிவில் இருக்கிறாராம். அதேபோல் கண் சிமிட்டாமல் பார்க்கும் அளவிற்கு ஹீரோயின் போல தான் வனிதாவின் மகளும் இருக்கிறார்.

ஹீரோயின் மெட்டீரியலா ஜோவிகா

vanitha-daugther-jovika
vanitha-daughter-jovika

Also Read : விஜய் டிவியிலிருந்து வெளியேற இதுதான் முக்கிய காரணம்.. உங்க சங்கார்த்தமே வேண்டாம் என தெரிந்து ஓடிய DD

Trending News