சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பிக் பாஸ் வீட்டிலும் அடித்து கொள்ள போகும் விஜய் குமாரின் குடும்பம்.. களம் இறங்கிய வனிதாவின் வாரிசு

Vanitha: தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான போது கூட பேமஸ் ஆகாத நடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் வனிதா, அதன்பின் மூன்று திருமணம் செய்து கொண்டு பெரும் சர்ச்சையை கிளப்பி படு பேமஸானார். கூட்டு குடும்பமாக இருக்கும் விஜயகுமாரின் வீட்டில் வனிதாவை மட்டும் ஒதுக்கி வைத்திருக்கின்றனர்.

சொந்த வீட்டுக்குள்ளே வனிதாவிற்கு ஆதரவு இல்லாமல் போன நிலையில், இப்போது பிக் பாஸ் வீட்டிலும் அடித்துக் கொள்ள பார்க்கிறார். ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 7 விஜயகுமாரின் இளைய மகள் ஸ்ரீதேவி போட்டியாளராக பங்கேற்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.

Also Read: உள்ளதும் போச்சே என்று தலையில் அடித்து புலம்பிய 6 பிரபலங்கள்.. பிக் பாஸில் கலந்து கேவலப்பட்ட சேரன்

இவர் தித்திக்குதே போன்ற ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார். முதலில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரீதேவி அதன் பின்பு தான் கதாநாயகியாக ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். ஆனால் திருமணமான பின்பு ஸ்ரீதேவி சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு பெங்களூரில் செட்டிலாகிவிட்டார்.

ஆனால் சமீப காலமாக தெலுங்கு மற்றும் தமிழ் ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார். அது மட்டுமல்ல சோசியல் மீடியாவிலும் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ஸ்ரீதேவி, பிக் பாஸ் சீசன் 7ல் ஒரு கண்டஸ்டண்டாக கலந்து கொள்ளப் போகிறார். இப்போது ஸ்ரீதேவியை வம்புக்கு இழுக்க வேண்டும் என்றே தன்னுடைய மகள் ஜோவிகாவை போட்டியாளராக களம் இறக்கப் போகிறார் வத்திக்குச்சி வனிதா.

Also Read: குக் வித் கோமாளி-யில் விட்டதை பிக் பாஸில் பிடிக்க வரும் நடிகை.. குத்தகைக்கு எடுத்த விஜய் டிவி

சமீபத்தில் வனிதா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் ஜோவிகாவுடன் பிக் பாஸ் வீட்டு கதவு அருகே நின்று கொண்டிருந்த புகைப்படத்தை பதிவிட்டு ஹிண்டு கொடுத்தார். ஏற்கனவே ஜோவிகா மும்பையில் பிரபல நடிகருக்கு சொந்தமான நடிப்பு பயிற்சி மையத்தில் ஓராண்டு பயின்று வந்துள்ளதாகவும் கூறினார்.

எனவே ஜோவிகா சினிமாவில் வெகு சீக்கிரமாக பிரபலமாக வேண்டும், அத்துடன் எக்கச்சக்க சினிமா வாய்ப்பும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே சீசன் 7ல் தன்னுடைய வாரிசை போட்டியாளராக வனிதா பங்கேற்க வைக்கிறார். ஆனால் அதே வீட்டில் வனிதாவின் தங்கை ஸ்ரீதேவியும் இருப்பதால் நிச்சயம் குடும்ப தகராறு வெடிக்க வாய்ப்பு இருக்கிறது.

Also Read: பிக் பாஸ் முதல் சீசனில் இருந்து அசுரத்தனமாய் உயர்ந்த கமலின் சம்பளம்.. திருப்பதி உண்டியல் போல் கொட்டும் பணம்

Trending News