திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

இதுதான் என் பையன்.. அறிமுகபடுத்திய வரலட்சுமி சரத்குமார்

36 வயதினிலே படத்தில் வரும் ஜோதிகா போல் மாறி விட்டார் வரலட்சுமி சரத்குமார். அழகுக்கு பஞ்சமில்லை ஆனால் உடல் அமைப்பை பார்த்தால் ஜோதிகாவிற்கு டப் கொடுப்பதுபோல தான் இருப்பார்.

போடா போடி படத்தின் மூலம் அறிமுகம் ஆனாலும் நன்றாக அவருடைய கதை தேர்வு செல்லும் என்ற நம்பிக்கையில் இருந்தார். ஆனால் அவர் பண்ணிய ஒரே தவறு தாரை தப்பட்டை படத்தில் நடித்ததுதான்.

பாலா எடுத்த படங்களிலேயே மிகவும் மோசமான படம் என்றால் அது தாரைதப்பட்டை மட்டும்தான். அந்த படத்தில் தேவையில்லாமல் நடித்து படமும் ஓடாமல் அவருக்கு வரவேண்டிய படவாய்ப்புகளும் வராமல் எல்லாம் கெட்டு குட்டிச்சுவர் ஆகிப்போனது.

வரலட்சுமி சரத்குமார் எப்பொழுதுமே சோசியல் மீடியாவில் கொஞ்சம் ஆக்டிவாக தான் இருப்பார். தற்பொழுது திடீரென என் மகனை அறிமுகப்படுத்துகிறேன் என்று ஒரு வீடியோவை வெளியிட்டார். டைட்டிலை பார்த்து படித்தவர்களுக்கு பகீரென்று ஆனது. ஆனால் உள்ளே செல்லும் போது தான் தெரிகிறது அவர் மகன் யார் என்று?

varalaxmi-sarathkumar
varalaxmi-sarathkumar

தற்போதுதான் வரலட்சுமி ஜிம் வொர்க் செய்த வீடியோ வைரல் ஆகி வந்தது. இப்பொழுது அடுத்த வீடியோவை ரிலீஸ் செய்துள்ளார். அவர் வளர்க்கும் நாய்க்குட்டி தான் அவரது மகன் என்று கூறி வரலட்சுமி சரத்குமார் அனைவரையும் டென்ஷன் படுத்தியுள்ளார் அதுதான் கீழே உள்ள வீடியோ:

Trending News