சமீபகாலமாக அழுத்தமான கதையையும், கதாபாத்திரத்தையும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் வரலட்சுமி தற்போது கொன்றால் பாவம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தயால் பத்மநாபன் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வரும் பத்தாம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் ப்ரிவ்யூ ஷோ பத்திரிக்கையாளர்களுக்காக நடைபெற்றது. அதைப் பார்த்த பிரபலங்கள் தற்போது தங்கள் விமர்சனத்தை ட்விட்டர் தளத்தில் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இப்படம் சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக இருப்பதாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
Also read: நீலாம்பரிக்கு நிகரான அக்மார்க் வில்லி.. வரலட்சுமி சரத்குமாரின் சிறந்த 5 படங்கள்
மேலும் வரலட்சுமியின் நடிப்பு வழக்கம் போல அற்புதமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அதிலும் வில்லத்தனத்தில் மிரட்டும் அவருடைய முகபாவனையும் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இதற்காகவே அவருக்கு நேஷனல் விருது கிடைக்கும் என்ற விமர்சனங்களும் குவிந்து கொண்டிருக்கிறது.

அது மட்டுமல்லாமல் தலைப்பிற்கு ஏற்ப படத்தின் பல காட்சிகள் மனிதர்களின் மற்றொரு முகத்தை காட்டும் படியாகவும் அமைந்துள்ளது சிறப்பு. இது தவிர சந்தோஷ் பிரதாப், சார்லி ஆகியோரின் கதாபாத்திரங்களும் கச்சிதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு பிறகு சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாக முன்னேறுவார் என்பதில் சந்தேகம் இல்லை.
Also read: நக்மா முதல் நமீதா வரை.. மகள் வரலட்சுமி முன்னாலேயே மேடையில் கலாய்க்கப்பட்ட சரத்குமார்
அதிலும் கிளைமாக்ஸ் காட்சியில் பேசப்படும் வசனம் ரசிக்கும் வகையில் இருப்பதாக கருத்துக்கள் குவிந்து வருகிறது. அந்த வகையில் கன்னடத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற இந்த படம் தமிழிலும் அந்த கரு மாறாமல் கொடுக்கப்பட்டிருக்கிறது. மிகவும் குறுகிய காலத்தில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் தற்போது செய்தியாளர்களை கவர்ந்துள்ளது படத்தின் ரிலீசுக்கு பக்க பலமாக அமைந்துள்ளது.
