வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அப்பாவால் 2 சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட வரலட்சுமி.. அக்கட தேசத்தில் கொண்டாடப்படும் ஹீரோயின்

வரலட்சுமி சரத்குமார் என்றாலே நம்முடைய ஞாபகத்துக்கு வருவது சரியான வில்லி கேரக்டருக்கு பொருந்தக் கூடியவர் என்று சொல்லும் அளவிற்கு நடிக்கக் கூடியவர். அதிலும் எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் அதை துணிச்சலுடன் மற்றும் அடாவடித்தனமாக நடிப்பவர். ஆனால் இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி படத்தின் ஹீரோயினாக சினிமாவிற்கு என்டரி கொடுத்தார்.

அதன்பின் இவர் நடிக்கும் பல படங்களில் வில்லி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்துள்ளார். அதிலும் இவர் நடித்த சண்டைக்கோழி படத்தில் விஷாலுக்கு வில்லியாகவும், சர்கார் படத்தில் விஜய்க்கு வில்லியாகவும் இவருடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார். ஆனால் முதலில் இவருக்கு பட வாய்ப்பு வந்ததே ஹீரோயின் ஆகத்தான்.

Also read: தளபதி 68 ஹீரோயினை லாக் செய்த விஜய்.. 4 வருடத்திற்கு பின் இணையும் எவர்கிரீன் கதாநாயகி

அதுவும் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் ஜெனிலியாக்கு பதிலாக முதலில் இவர்தான் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் அழைப்பு விடுத்திருக்கிறார். இவரும் ஆடிசன், ஸ்கிரீனிங் டெஸ்ட் என அனைத்தையும் முடித்துவிட்டு மிகவும் ஆசையாக இருந்திருக்கிறார். ஆனால் இவருடைய அப்பா அப்பொழுது நடிப்பதற்கு அனுமதி கொடுக்கவில்லை.

அதன் பிறகு இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் ஹிட் வெற்றி படமான காதல் படத்தில் சந்தியாவிற்கு பதிலாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு தான் முதலில் வந்தது. அப்பொழுது சரத்குமார், நடிப்பு இப்பொழுது வேண்டாம் முதலில் படிப்பை முடித்த பின்பு நடிப்பது பற்றி யோசிக்கலாம் என்று கண்டிஷன் போட்டு விட்டார்.

Also read: தத்துப் பிள்ளைக்கு கிடைத்த பெஸ்ட் ஆங்கர் விருது.. தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் விஜய் டிவி

இப்படி பல நல்ல படங்களில் நடிக்கும் வாய்ப்பை இழந்து விட்டேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியில் வரலட்சுமி சரத்குமார் கூறியுள்ளார். ஆனால் இப்பொழுது நடிக்கனும் வந்த பிறகு ஹீரோயின் வாய்ப்பை விட வில்லிக்கு தான் என்னை கூப்பிடுகிறார்கள். அது மிகவும் வேதனையை கொடுக்கிறது. அதனால் தான் தற்போது இவர் தமிழ் படங்களை விட தெலுங்கு படங்களில் அதிகம் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

அதன் பின்னர் பல்வேறு படங்களில் கமிட்டான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பிற மொழி படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வரிசையில் இவர் தமிழ் படங்களை விட மற்ற மொழி படங்களில் தான் அதிகமாக கமிட்டாய் இருக்கிறார். ஆனாலும் தற்போது வரை ஹீரோயினாக வந்த இரண்டு சூப்பர் ஹிட் படத்தை அப்பாவால் மிஸ் ஆனதை நினைத்து மனதில் வருத்தப்பட்டு தான் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

Also read: மார்க்கெட் போயிடும் என ரஜினிக்கு வில்லனாக நடிக்க மறுத்த விக்ரம்.. தரமான செலக்சன் செய்த ஜெய் பீம் இயக்குனர்

Trending News