திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

பிரபல பாலிவுட் நடிகருடன் ஜோடி போட்ட வரலட்சுமி.. முரட்டுத்தனமாக வெளிவந்த ‘தத்வமசி’ போஸ்டர்

தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் தயாரிக்கப்படும் படம்தான் ‘தத்வமசி’. இந்தப் படத்தில் எழுத்தாளர் ரமணா கோபிசெட்டி இயக்குனராக அறிமுகமாக உள்ளார். அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான ‘தத்வமசி’ படத்தில் பாலிவுட் இளம் நடிகர் இஷன், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

தற்போது படத்தின் மோஷன் போஸ்டர்  இணையத்தில் வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வருகிறது. ‘தத்வமசி’ என்பது ஒரு சமஸ்கிருத மந்திரம் மற்றும் இது உபநிஷதங்களைச் சேர்ந்த மகாகவியில் ஒன்றாகும்.

அதேபோல் ‘தத்வமசி’  தலைப்பு லோகோ இரத்தக் கறை படிந்த ஜாதகத்துடன் ஆச்சரியப்படுத்துகிறது. இதை வைத்து படமானது ஆன்மீக ரீதியாகவும் இருக்கலாம் என்று ரசிகர்கள் கணிக்கின்றனர். மேலும் இந்தப்படத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் ஹரிஷ் உத்தமன் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

சாம் சிஎஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையமைக்கிறார், ஷியாம் கே நாயுடு படத்தின் லென்ஸ்மேன், மார்த்தாண்ட் கே வெங்கடேஷ் எடிட்டராக இருக்கிறார். இந்தியாவின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் ஸ்டண்ட் நடன அமைப்பைச் செய்ய, பாடல்களை சந்திரபோஸ் எழுதுகிறார்.

எப்போதும் தனித்துவ நடிப்பினை வெளிக்காட்டும் வரலட்சுமி இந்தப்படத்திலும் தனக்கென ஒரு கதாபாத்திரத்தில் தன்னுடைய அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திருப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tatvamasi
Tatvamasi

‘தத்வமசி’ படத்தின் தற்போது வெளியாகியிருக்கும் இந்த மோஷன் போஸ்டர் ரசிகர்களிடையே  பரபரப்பையும், அதிக ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Trending News