திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

36 வயசு, இதைக் கேட்டது ஒரு குத்தமா.? மேடையில் பத்ரகாளியாக மாறி விளாசிய வரலட்சுமி

தமிழ் சினிமாவில் பின்புலத்துடன் கதாநாயகியாக அறிமுகமானாலும், தன்னுடைய பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்து, முன்னணி நடிகையாக மாறியவர் தான் வரலட்சுமி சரத்குமார். இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் கால்பதித்தார்.

மேலும் கெத்தான கதாபாத்திரங்கள், தைரியமான காட்சிகள் என துணிச்சலான படங்களை தேர்வு செய்து நடிப்பதால், வரலட்சுமிக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.

இந்த நிலையில் வரலட்சுமி கடந்த மார்ச் 5ஆம் தேதி தன்னுடைய 36வது பிறந்த நாளான்று சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி கொண்டாடினார்.

அதன்பின், ‘கல்யாணம் எப்போ?’ என்று செய்தியாளர் கேட்டதும் சட்டென்று கடும் கோபம் அடைந்தார். அப்போது பேசிய வரலட்சுமி, திருமணம் என்பது பெண்களுக்கு அவசியமானதுதான். ஆனால் ஆண்களுக்கு ஒரு கொள்கை இருப்பது போல, பெண்களுக்கும் சில கொள்கைகள் இருக்கக் கூடாதா?

varalaxmi-sarathkumar
varalaxmi-sarathkumar

எனவே இதுபோன்ற கேவலமான கேள்விகளை இனி யாரிடமும் கேட்காதீர்கள்! என்று காரசாரமாக பதிலளித்து அங்குள்ள அவர்களை வாயடைக்கச் செய்தார்.

Trending News